மதுரை: "நான் எப்படி டீல் செய்வேன் என்பது சீனியர் லீடர்களுக்கு தெரியும்" – சசிகலா சூசகம்!

“அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும்” என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா

தேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த வி.கே.சசிகலா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, திமுக அரசை அகற்றினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன், சர்ப்ரைஸாக எல்லாமும் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள், அதிமுக அட்சியை மீண்டும் கொண்டு வருவேன்” என்றவரிடம்,

‘செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே’ என்ற கேள்விக்கு,

“யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். பார்ப்போம், எத்தனை பேரை கட்சியில் இருந்து எடுக்க முடியும் என? எம்ஜிஆரின் மறைவிலிருந்து கட்சியை பார்த்து கொண்டிருக்கிறேன். அதிமுக பழைய நிலைக்கு திரும்பும், இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன்” என்றவரிடம்

சசிகலா, எடப்பாடி பழனிசாமி

‘2021-ல் துரோகிகளால் தோற்றோம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே’ என்ற கேள்விக்கு,

“யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செய்வது என் பழக்கம் இல்லை. என்னைப் பற்றி சீனியர் லீடர்களுக்கு எப்படி டீல் செய்வேன் என தெரியும். பொறுமையாக இருங்கள், என் அனுபவம் என்னவென்று உங்களுக்கு தெரியும். எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு அதிமுக இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது ஜெயலலிதாவை திட்டியவர்கள், எதிர்த்தவவர்களைக் கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாகத் தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும்” என்றவர்,

“வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். திமுக ஆட்சியின்போது பலஆயிரம் வாக்குகளை நீக்கினார்கள், மோசடி செய்தார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.