ரேவா: மத்தியப் பிரதேசம் ரேவாவில் தான் படித்த சைனிக் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தீவிரவாதிகள் இருந்த இடங்களை மட்டுமே நாங்கள் தாக்கினோம். பொது மக்கள் மற்றும் ராணுவ மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை.
அதேபோல் தொழுகை நடைபெறும் நேரத்திலும் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை. எங்கள் இலக்குகளை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அடைந்தோம். இவ்வாறு திவிவேதி கூறினார்.