`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு விடுத்திருந்தார். ஷாருக்கானுக்கு மும்பை அருகில் உள்ள அலிபாக் கடற்கரையில் பண்ணை வீடு இருக்கிறது.

அந்த பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதை விட படகில் செல்வதுதான் வசதியாக இருக்கும். எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இயக்குநர் பராகான், கரண் ஜோகர், நடிகை ராணி முகர்ஜி, அனன்யா பாண்டே, அமிதாப்பச்சனின் பேரன் நவ்யா நந்தா உட்பட ஏராளமானோர் அலிபாக் பண்ணை வீட்டிற்கு நேற்றே சென்றுவிட்டனர்.

அவர்கள் படகு மூலம் அங்கு சென்றனர். தங்களுடன் காரையும் கப்பலில் எடுத்துச் சென்றனர். அவர்கள் படகில் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோவை பராகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னை பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்ததற்கு நன்றி என்றும், இந்த அனுபவம் தனது வாழ்நாளில் சிறந்த அனுபவம் என்று இந்த அனுபவத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

ஷாருக்கான் வீட்டிற்கு வெளியில் ரசிகர்கள்

நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கி ஷாருக் கானின் பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நடந்தது. இதில் ஷாருக் கான் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஷாருக் கானுக்கு சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் உள்ள ஷாருக்கானின் மன்னத் பங்களாவில் நேற்று இரவே ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் நள்ளிரவில் மன்னத் பங்களாவிற்கு வெளியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர். துபாய், டெல்லி, கொல்கத்தா மற்றும் தென்னிந்தியாவில் இருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். தற்போது மன்னத் பங்களா புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. எனவே ஷாருக் கான் வேறு வீட்டில் வசித்து வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.