ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரக பெயர்ச்சியாக கருதப்படுவது சனிப்பெயர்ச்சி. நீதியின் கடவுளான சனி பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். அந்த வகையில் இந்த மாதம் சனி பகவான் தற்போது சஞ்சரிக்கும் கும்ப ராசியிலிருந்து விலகி, குருவின் வீடான மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த மாபெரும் நிகழ்வு, அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு ராஜயோகத்தையும், சில ராசிகளுக்கு சவால்களையும் வழங்கும் இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை விரிவாகக் காண்போம்.
Add Zee News as a Preferred Source
தொடங்கும் ஏழரை சனி
இந்த சனிப்பெயர்ச்சியின் மிக முக்கிய அம்சமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரய சனி தொடங்குகிறது. அதே சமயம், மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடுகிறார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து, பாதச் சனி தொடங்குகிறது. மீன ராசிக்காரர்களுக்கு விரய சனி முடிந்து, ஜென்ம சனி தொடங்குகிறது.
கோடீஸ்வர யோகத்தை பெறும் ராசிகள்
ரிஷபம்: உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்திற்கு சனி பகவான் வருகிறார். இது ஒரு அற்புதமான அமைப்பாகும். இதுவரை தொழிலில் இருந்த தடைகள் விலகி, அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றியைத் தந்து, பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். விரும்பிய இடத்திற்கு வீடு மாறுதல், சுகபோக வசதிகள் பெருகுதல் என இந்த பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளி வழங்கும்.
மிதுனம்: தொழில் மற்றும் உத்தியோகத்தில் பிரகாசமான முன்னேற்றங்கள் ஏற்படும். விரும்பிய வேலை அல்லது இடமாற்றத்தைப் பெற வாய்ப்புகள் கைகூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வணிக விரிவாக்கத்திற்கு இது மிகவும் சாதகமான நேரம். சொத்துக்களில் செய்யும் முதலீடுகள், எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.
கன்னி: உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். கணவன்-மனைவி உறவில் கவனம் தேவைப்பட்டாலும், தொழில் ரீதியாக இது ஒரு பொற்காலமாக அமையும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் மூலம் வருமானம் குவியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
மேஷம்: உங்களுக்கு ஏழரை சனி தொடங்குவதால், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்கள், அலைச்சல்கள் ஏற்படலாம். எந்தவொரு செயலிலும் கூடுதல் கவனமும், நிதானமும் தேவை. உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நிதி விஷயங்களில் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.
கடகம்: உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சனி பகவான் பிரவேசிக்கிறார். இதனால், தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. நீண்ட தூரப் பயணங்கள் ஏற்படும். சில நேரங்களில் அதிர்ஷ்டம் கைநழுவிப் போவது போன்ற உணர்வு ஏற்பட்டாலும், உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தை முதலீடுகளில் கவனத்துடன் செயல்பட்டால் லாபம் காணலாம்.
கும்பம்: ஏழரை சனியின் இறுதிக் கட்டமான பாதச் சனி உங்களுக்குத் தொடங்குகிறது. குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
About the Author
RK Spark