கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள்

சென்னை: கல்​லறைத் திரு​நாளை​ஒட்டி சென்​னை​யில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்​களில் சிறப்பு ஆராதனை​யும், கல்​லறைத் தோட்டங்​களில் சிறப்பு வழி​பாடும் நடை​பெற்​றன. கல்​லறைத் தோட்​டங்​களில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் குடும்​பம் குடும்​ப​மாகச் சென்று இறந்த உறவினர்​களுக்​காக ஜெபம் செய்​தனர். கிறிஸ்​தவர்​கள் ஒவ்​வோர் ஆண்​டும் நவ.2-ம் தேதியை அனைத்து ஆன்​மாக்​கள் தின​மாக அனுசரிக்​கிறார்​கள். இந்​நாள் கல்​லறைத் திரு​நாள் என்​றும் அழைக்​கப்​படு​கிறது.

கல்​லறைத் திரு​நாளில் கிறிஸ்​தவர்​கள் தங்​கள் குடும்​பங்​களில் இறந்த உறவினர்​கள், பெற்​றோர், உடன் ​பிறந்​தோர் மற்​றும் நண்​பர்​கள் அடக்​கம் செய்​யப்​பட்ட கல்​லறை​களை சுத்​தப்​படுத்​தி, வண்​ணம் தீட்டி குடும்​பத்​தோடு சென்று ஜெபம் செய்​வது வழக்​கம். அது​ மட்​டுமின்றி இறந்​தோருக்கு பிடித்​த​மான உணவு​களை அவர்​களின் நினை​வாக ஏழை எளிய​வர்​களுக்கு வழங்​கு​வார்​கள். மேலும் கல்​லறைத் தோட்​டங்​களில் சிறப்பு ஆராதனை மற்​றும்சிறப்பு வழி​பாடும் நடை​பெறும்.

அந்த வகை​யில் நேற்று கல்​லறைத் திரு​நாள் அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி சென்​னை​யில் அனைத்து தேவால​யங்​களி​லும் நேற்று காலை மற்​றும் மாலை​யில் சிறப்பு ஆராதனை​கள் நடை​பெற்​றன. கத்​தோலிக்க ஆலயங்​களில், இறந்​தோர் நினை​வாக சிறப்​புத் திருப்​பலி ஒப்​புக்​கொடுக்​கப்​பட்​டது. ஆலயங்​களுக்கு உட்​பட்ட கல்​லறைத் தோட்​டங்​களுக்கு பாதிரி​யார்​கள் சென்று இறந்​தவர்​களுக்​காக ஜெபம் செய்​தனர். அங்​குள்ள கல்​லறை​களை புனிதநீர் கொண்டு தெளித்​தனர்.

சென்ட்​ரல் ரயில் நிலை​யம் எதிரே​யுள்ள மிக​வும் பழமை வாய்ந்த செயின்ட் மேரீஸ் கல்​லறைத் தோட்​டம், செயின்ட் பேட்​ரிக் கல்​லறைத் தோட்​டம், கீழ்ப்​பாக்​கம் கல்​லறைத் தோட்​டம், சாந்​தோம் கியூபிள் ஐலேண்ட் கல்​லறைத் தோட்​டம், காசிமேடு கல்​லறைத் தோட்​டம் உள்​ளிட்ட கல்​லறைத் தோட்​டங்​களில் நேற்று காலை 7 மணி​முதல் மாலை வரை ஏராள​மான கிறிஸ் ​தவர்​கள் குடும்​பம் குடும்​ப​மாகச் சென்று தங்​கள் உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​களின் கல்​லறை​களை சுத்​தப்​படுத்தி மலர்​களால் அலங்​கரித்​தனர். மெழுகு​வர்த்தி ஏற்றி இறந்​தோருக்​காக ஜெபம் செய்​தனர். மேலும், ஏழை எளிய​வர்​களுக்கு உணவுப் பண்​டங்​கள்​, ஆடைகள்​ வழங்​கினர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.