வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து

சென்னை: ‘​வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி​களை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​தி​னால் பயனில்​லை’ என மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார்.

சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறியது: திமுக மீது எப்​போதெல்​லாம் ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் வரு​கிறதோ, அப்​போதெல்​லாம் அதை திசை திருப்​புவதற்​காக பல்​வேறு விஷ​யங்களைக் கையில் எடுப்​பது வாடிக்​கை​யாக இருக்​கிறது. அப்​படித்​தான் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத் திட்​டத்தை கையில் எடுத்​துள்​ளனர். அந்​தக்கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, 75 லட்​சம் போலி வாக்​காளர்​கள் இருப்​ப​தாகச் சுட்​டிக்​காட்டி உள்​ளார்.

இந்த வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​தின் நோக்​கமே, இரட்டை வாக்​காளர்​கள், இறந்​து​போன வாக்​காளர்​கள் மற்​றும் போலி வாக்​காளர்​களைக் களைவது​தான். போலி வாக்​காளர்​களை நீக்க வேண்​டும் என்று திமுக​வினரே பலமுறை சொல்​லி​யிருக்​கின்​றனர். தேர்​தல் முடிந்த பிறகு திருத்த பணி​களை செய்​வ​தில் எந்த பயனும் கிடை​யாது.

தேர்​தல் முறை​யாக நடக்க வேண்​டுமென்​றால், வாக்​காளர்பட்​டியல் சரி​யாக இருக்க வேண்​டும். நகராட்சி நிர்​வாகம் மற்​றும்குடிநீர் வழங்​கல்துறை​யின்
ஊழல் வெளிச்​சத்​துக்கு வந்​திருக்​கிறது. இதுகுறித்து சிபிஐ விசா​ரிக்க வேண்​டும். இவ்​வாறு கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.