சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைச்சர் கேஎன் நேரு படத்துடன் , நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை போலீசார் அகற்ற முயற்சித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் காவல்துறையினருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மக்கள் கூட்டம் கூடியது. இதையடுத்து, காவல்துறையினர் பேனரை அகற்றுவதை விட்டுவிட்டு சென்றனர். அமைச்சர் நேருவின் கீழ் உள்ள நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில், 2,538 பணி நியமனத்தில், ஒரு வேலைக்கு 25 லட்சம் […]