55-வது கேரள மாநில சினிமா விருதுகளின் வெற்றியாளர்கள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான நடுவர்கள் குழு இந்தாண்டுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
கடந்தாண்டு வெளியான படங்களில் 128 மலையாளத் திரைப்படங்கள் விருதுகளுக்கு விண்ணப்பித்திருக்கின்றன.

அதில் 26 திரைப்படங்களை இறுதிச் சுற்றுக்கு ஷார்ட்லிஸ்ட் செய்து, இப்போது அதிலிருந்து வெற்றியாளர்களை அறிவித்திருக்கிறார்கள்.
மஞ்சும்மல் பாய்ஸ், பிரமயுகம் ஆகியத் திரைப்படங்கள் பல பிரிவுகளில் விருது வென்றிருக்கின்றன.
எந்தெந்த படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது, அந்தப் படங்களையெல்லாம் எந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
மஞ்சும்மல் பாய்ஸ்: சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒலிக்கலவை – ‘டிஸ்னி + ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
பிரமயுகம்: – சிறந்த நடிகர், சிறந்த ஒப்பனை, சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த பின்னணி இசை – சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
பெமினிச்சி பாத்திமா: – சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம் (இரண்டாவது இடம்), சிறந்த அறிமுக இயக்குநர் – கூடிய விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும்.

நந்தன சம்பவம்: சிறந்த குணச்சித்திர நடிகை – ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
ப்ரேமலு: சிறந்த பிரபல திரைப்படம் – டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
பாரடைஸ்: சிறந்த திரைக்கதையாசிரியர், ஸ்பெஷல் ஜூரி விருது – ப்ரைம் வீடியோ மற்றும் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
போகைன்விலியா: சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடன இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை – சோனி லிவ் ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
அம் ஆ (Am ah): சிறந்த பின்னணி பாடகி – ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
ARM: சிறந்த பின்னணி பாடகர், சிறந்த வி.எஃப்.எக்ஸ் – டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.

கிஸ்கிந்த காண்டம்: – சிறந்த படத்தொகுப்பு – டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
பனி – சிறந்த சிங் சவுண்ட் – சோனி லிவ் ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
பரோஸ்: சிறந்த டப்பிங் கலைஞர் – டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
விருது வென்ற படங்களில் உங்களுடைய பேவரைட் என்னவென்பதையும் கமென்ட்டில் பதிவிடுங்கள்!