ரஷியாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மாஸ்கோ,

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதனையடுத்து, நேற்று மதியம் 2.14 மணியளவில் அப்பக்குதியில் ரிக்டர் 6.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

ரஷியாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியில் ஓடினர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.