india vs Australia 4th t20 : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இந்த சூழலில் 4-வது போட்டி எங்கு, எப்போது நடக்கிறது?, எந்த சேனலில் நேரலை செய்யப்படும் என்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Add Zee News as a Preferred Source
இந்தியா vs ஆஸ்திரேலியா 4-வது போட்டி
இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி நவம்பர் 6, 2025 அன்று ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் உள்ள பில் பிப்பன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:40 மணிக்குத் தொடங்கும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா 4-வது போட்டி நேரடி ஒளிபரப்பு
நவம்பர் 6 அன்று நடைபெறவிருக்கும் நான்காவது போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாகப் பார்க்கலாம் அல்லது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழியாக ஆன்லைனில் ஸ்ட்ரீம்மிங்கிலும் பார்க்கலாம்.
முக்கிய வீரர்கள்:
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா.
ஐந்தாவது போட்டி நடக்கும் தேதி
கோல்ட் கோஸ்ட் போட்டிக்குப் பிறகு, இரு அணிகளும் நவம்பர் 8, 2025 அன்று திட்டமிடப்பட்ட ஐந்தாவது மற்றும் இறுதி T20 போட்டிக்காக பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடக்கும்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு
நான்காவது போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? என பலரும் கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இரு அணிகளுக்குமே வாய்ப்பு இருக்கிறது என பலரும் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் சமபலத்துடன் இருக்கின்றன. இரு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த இளம் பிளேயர்கள் அதிகம் இருப்பதால் போட்டி வெற்றி கணிப்பு என்பது கணிக்க முடியாமலேயே இருக்கிறது. அதனால், இப்போட்டி சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது மட்டும் உறுதி.
About the Author
S.Karthikeyan