தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்? தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சண்டி என்ற மகாசக்தி ஆதிதேவியர்களான கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரும் ஒன்றிணைந்த வடிவம். இவர்களை வெல்லவே முடியாது என்பதை நிரூபித்த நாள்களே நவராத்திரி என்றானது. சகல தெய்வங்களின் அம்சமாக ஆதிபராசக்தி எடுத்த வடிவமே சண்டி. இந்த சண்டியை ஆராதித்து செய்யப்படுவதுதான் சண்டி ஹோமம். சண்டி ஹோமத்தைச் செய்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ சகல துக்கங்களில் இருந்தும் விடுபடலாம். தீய சக்திகள், எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து, வெல்லலாம் என்பது நம்பிக்கை. மூவரின் அனுகிரஹத்தால் ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அதிகாரம் போன்றவை பெறலாம் என்பது உறுதி.
அசுர சக்திகளின் கொடுமையைத் தாள முடியாத தேவர்களும் ரிஷிகளும் ஒன்று கூடி அன்னை ஆதிபராசக்தியை சரண் அடைந்தனர். சகல தெய்வங்களின் சங்கமத்தாலேயே மாபெரும் அந்த அசுரக் கூட்டத்தை அழிக்க முடியும் என்று அறிந்தனர். எனவே மகாசண்டி எனப்படும் தேவியை வரவைக்க மார்க்கண்டேயர் அருளால் உருவான சண்டி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து பெரும் ஹோமம் ஒன்றை நடத்தினார். அதுவே சண்டி ஹோமம் எனப்பட்டது. இந்த ஹோமத்தின் விளைவால் மாபெரும் சக்திகள் ஒன்றிணைந்து மகாசண்டியாக உருவானாள். தீய சக்திகள் அழிக்கப்பட்டன.

அதன்பிறகு இந்த மகாசண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு யார் சங்கல்பித்துக் கொண்டாலும் அவர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்று அன்னை மார்க்கண்டேயருக்கு உறுதி அளித்தாள். அந்நாளில் தேவர்கள், ஞானிகள், அரசர்கள் தொடங்கி இந்நாளில் துக்கத்தில் தவிக்கும் சாமானிய மக்கள் வரை தங்களது இஷ்ட காரியங்களை இந்த சண்டி ஹோமத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது ஆன்மிக நம்பிக்கை. குறிப்பாக கவலைகள் தீரும்; வாழ்க்கை அமைதியாக வளமை பெறும் என்பது உறுதி.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த சண்டி ஹோமத்தால் உலக நன்மை உருவாகும்; சத்ரு பயம் நீங்கும். லஷ்மி கடாட்சம் கிட்டும். படிப்பில் படிப்பில் ஒழுக்கத்தில் முன்னேற்றம் உருவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிள்ளை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம்.; வியாபார விருத்தி உண்டாகும். அனைத்து காரியங்களும் வெற்றியாகும். கிரக தோஷங்கள் நீங்கும். எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
இத்தனை சிறப்பான ஹோமம் உங்கள் குடும்ப நன்மைக்காக சக்தி விகடன் நடத்தவுள்ளது. இது சாந்நித்யம் மிக்க கோயில்களில் சித்தர் பீடங்களில் மட்டுமே செய்யப்படுவது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் வெகு சிறப்பான ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.
வேறெங்கும் காண முடியாத வகையில் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு வந்துவிட்டாலே ஒருவரின் தோஷங்கள், ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு. இங்குள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் மிகப் பிரபலமானது. இங்கு துல்லியமாகக் கணித்த ஜோதிடத்தால் பலரது பிரச்னைகளையும் தீர்த்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு வெகு அபூர்வமான கோமாதாக்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பான பரிகாரமாக விளங்குகின்றன. இங்கு வந்தாலே ஒருவரின் வாழ்வு வளம் பெரும்; முன்னேற்றம் உருவாகும் என்பது பலரது நம்பிக்கை. எந்த பிரச்னைக்காக இங்கு வந்து வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

வேத காலத்தில் 48,000 ரிஷிகள் கூடி பல வேள்விக்கு வித்திட்ட இடம்தான் இந்த தாருகாவனம் சித்தர் பீடம். நித்ய யக்ஞ பூமியாக இருந்த இந்த புண்ணிய பூமி, அரூபமான சித்தர்களின் அருளாசியால் இன்றும் நல்ல அதிர்வுகளால் ஜொலித்து வருகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே சித்தர்களின் தவ பூமியாகவும் சிவ வழிபாட்டுத் தலமாகவும் இருந்த இந்த இடம் தற்போது குருஜி. ப.கருணாகரன் சுவாமிகளுக்கு சித்தர்களின் உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட ஆலயமாக எழும்பியுள்ளது.
இதனால் வரும் 17-11-2025 கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கும் மேல் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு மகாசண்டி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மகா சண்டி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் உங்கள் பிரச்னைகள் யாவும் நிச்சயம் நீங்கும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan