மின்சாரப் பேருந்துகளால் செலவு கணிசமாக குறைந்துள்ளது: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் 

சென்னை: காற்று மாசு​பாட்​டைக் குறைக்​க​வும், எரிபொருள் செல​வைக் கட்​டுப்​படுத்த​வும் தமிழகத்​தில் மின்​சா​ரப் பேருந்து இயக்​கும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. சென்​னை​யில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்​சா​ரப்பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வருகின்​றன. தற்​போது 255 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

மின்​சா​ரப் பேருந்​துகளை நேரடி​யாக கொள்​முதல் செய்து இயக்​காமல் மொத்த விலை ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கு​வ​தால் வரு​வாயை விட செலவு பல மடங்கு அதி​க​மாக இருப்​ப​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. இந்​நிலை​யில் மின்​சா​ரப் பேருந்​துகளால் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் மொத்த செலவு கணிச​மாக குறைவ​தாக மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் அனைத்து மாநிலங்​களி​லும் நகர்ப்​புறங்​களில் காற்று மாசு​பாட்​டைக் குறைக்க 5000-க்​கும் மேற்​பட்ட மின்​சா​ரப் பேருந்​துகள் மொத்த விலை ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

மின்​சா​ரப் பேருந்துகளை நேரடி​யாக வாங்​கும் செல​வு, பராமரிப்பு சிக்​கல்​கள் மற்​றும் உயர் தொழில்​நுட்​பம் காரண​மாக மொத்த விலை ஒப்​பந்த முறை தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. உலகள​வில் இதே நடை​முறை​தான் உள்​ளது. இந்த முறை​யில் ஒப்​பந்த நிறு​வனம் பேருந்​துகளை கொள்​முதல் செய்து 12 ஆண்​டு​களுக்கு போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பாக இயக்கி பராமரிப்பை மேற்​கொள்ள வேண்​டும். இதற்கு இயக்​கப்​படும் கிலோமீட்​டர் அடிப்​படை​யில் தொகை வழங்​கப்​படு​கிறது.

டீசல் பேருந்தை இயக்​கு​வதற்கு ஒரு கிலோமீட்​டருக்கு ரூ.128 செல​வாகும். மின்​சார பேருந்​துகளுக்​கான இயக்​கச் செலவு கிலோமீட்​டருக்கு ரூ.92 மட்​டுமே. இந்த செல​வீனங்​களை ஒப்​பிடு​கை​யில், மின்​சா​ரப் பேருந்​துகளின் மொத்த விலை ஒப்​பந்த முறை​யில் மூலதனச் செல​வு, பராமரிப்பு செல​வு, ஓட்​டுநர் ஊதி​யம், பயிற்​சிக்​கான செல​வு​கள் ஆகியவை உற்​பத்​தி​யாள​ரால் ஏற்கப்​படு​வ​தால், போக்​கு​வரத்​துக் கழகத்​தின் மொத்த செலவு கணிச​மாகக் குறை​கிறது. நேரடி கொள்​முதல் மற்​றும் பராமரிப்பு முறை​யுடன் ஒப்​பிடும்​போது, இந்த முறை​யில் செல​வினம் கணிச​மான அளவு குறை​வாக உள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.