ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு; காங்கிரஸ் தோற்றது இதனால்தான் – ராகுல் காந்தி

புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் முடிவுகளுடன் பொருந்தவில்லை. ஹரியானாவில் நடந்தது ஆட்சித் திருட்டு. ஜென் ஸீ தலைமுறையினர் வாக்கு திருட்டு குறித்து புரிந்துகொள்ள வேண்டும். வாக்கு திருட்டு மூலம் ஜென் ஸீ இளம் வாக்காளர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது.

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. ஹரியானாவில் பிரேசில் பெண் மாடலின் படம் பல பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானாவில் 5,21,619 போலியான வாக்குகள் இடம்பெற்றிருந்தன. ஒரு தொகுதியில், ஒரே புகைபடத்தை வைத்து 100 வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானாவில் செலுத்தப்பட்ட 8-ல் ஒரு வாக்கு போலியானது.

ஹரியானாவில் பல வாக்குச்சாவடிகளில் 200, 100, 50 என வாக்குகள் திருடப்பட்டன. 1,24,177 வாக்காளர்களின் புகைப்படங்கள் போலியானவை என்பதை கண்டறிந்துள்ளோம். அதுபோல ஒரே புகைப்படம், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து முக்கிய சிசிடிவி ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டது. போலி புகைப்படங்களை நீக்கும் மென்பொருள் வசதி தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. பின்னர் எப்படி இதுபோல நடக்கிறது?. ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை செலுத்த தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது?. காங்கிரஸின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றும் சதி நடைபெற்று வருகிறது.

வீடு எண் 0 என முகவரி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எப்படி?. ஒரு பாஜக நிர்வாகிக்கு ஒரு தொகுதியில் 66 வாக்குகள் உள்ளன. ஒரே முகவரியில் 500 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு நபர் உ.பியிலும், ஹரியானாவிலும் வாக்களித்துள்ளார். ஹரியானாவில் தேர்தலுக்கு முன்பு 3.5 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. நாடு முழுவதும் வாக்குத் திருட்டு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. வாக்கு திருட்டு மூலம் பிஹாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்கிறது. ஜனநாயகத்தை அழிப்பதில் பாஜகவின் புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.” எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் இது தொடர்பான ஆவணங்களை பவர் பாயிண்ட் மூலமாக விளக்கமாக காண்பித்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சிலரும் நேரடியாக இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.