நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு

மதுரை: திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த முத்​து, கல்​யாணி, சிவ​சாமி, காளி​முத்து உள்​ளிட்ட 30 பேர், தங்​களுக்கு சொந்​த​மான இடத்தை அரசு கையகப்​படுத்​தி​யதற்​கான இழப்​பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்​கில் ரூ.4,37,42,783 இழப்​பீடு வழங்​கு​மாறு மாவட்ட நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து அரசுத் தரப்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இழப்​பீட்​டு தொகையை 8 வாரத்​தில் வழங்க உத்​தர​விட்​டது. ஆனால், இழப்​பீடு வழங்​கப்​பட​வில்​லை.

மேல்​முறையீட்டு மனுவை விசாரித்த நீதிப​தி​கள் வேல்​முரு​கன், ராமகிருஷ்ணன், “நிலம் கையகப்​படுத்​தியது தொடர்​பான நிலுவை வழக்கு​களுக்​காக, திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் உள்ளஅனைத்து டாஸ்​மாக் கடைகளின் தினசரி விற்​பனைத் தொகையை வைப்​புத் தொகை​யாக நீதி​மன்​றத்​தில் செலுத்த வேண்​டும்” என்று உத்​தர​விட்​டனர்.

இந்த உத்​தரவை நிறைவேற்​றாத​தால் முத்து உள்​ளிட்ட 30 பேரும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில், நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குத் தொடர்ந்​தனர். இந்த மனு நீதிப​தி​கள் வேல்​முரு​கன், ராமகிருஷ்ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் முத்​து கணேச​பாண்​டியன் வாதிட்​டார். கூடு​தல் அட்​வகேட் ஜெனரல் வீராக​திர​வன் வாதிடும்​போது, “நீ​தி​மன்ற உத்​தரவை எதிர்த்து டாஸ்​மாக் நிறு​வனம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்பட உள்​ளது” என்​றார்.

பின்​னர் நீதிப​தி​கள், “திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் அனைத்து டாஸ்​மாக் கடைகளின் அக்.16 முதல் நவ.6 வரை​யான வரு​மானம் மற்​றும் வங்கி விவரங்​களு​டன் டாஸ்​மாக் மேலாண்மை இயக்​குநர் மற்​றும் மாவட்ட மேலா​ளர் ஆகியோர் நாளை (நவ.7) ஆஜராக வேண்​டும்” என்​று உத்​தர​விட்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.