தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது.
அந்த செய்தியாளர் சந்திப்பில் சினிமா நிருபர் ஒருவருக்கும், கௌரி கிஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏற்கெனவே நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த நிருபர் ஹீரோவிடம், “கௌரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?” என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கௌரி கிஷன், “நீங்கள் தானே அன்றைக்கு கேள்வி கேட்டது. எப்படி அதனைக் கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னவென்று கேட்குறீங்க. என்னோட எடையைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்” என அந்த நிருபருக்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பலரும் கௌரி கிஷனிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சந்தோஷ் நாராயணனும் கௌரி கிஷனிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” ஏற்கனவே அவமானகரமாக பேசியிருந்தும், அதையே மீண்டும் வலியுறுத்த தன்னிடம் உரிமை உண்டு என்று நினைக்கும் அந்த பத்திரிகையாளர் நடத்தை மிகவும் அருவருப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
The fact that this deplorable journalist feels entitled to double down on his already shameful remark is beyond shocking. Glad to see the deserving backlash and we should remember that it is all these micro aggressions that lead to heinous crimes against women today. ♂️♂️ Bravo… https://t.co/PtdG89NOyU
— Santhosh Narayanan (@Music_Santhosh) November 7, 2025
அவர்மீது எழுந்த எதிர்ப்பு முற்றிலும் நியாயமானது. பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் இன்று அதிகரிக்கக் காரணம் இத்தகைய சிறிய அளவிலான அவமதிப்புகள் மற்றும் அத்துமீறல்கள்தான் என்பதை நாமும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இந்த சம்பவத்தை தைரியமாக எதிர்கொண்ட கௌரி கிஷனுக்கு என்னுடைய பாராட்டுகள்.