கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்.

நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் – திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்.

உதயநிதி ஸ்டாலின்: இந்திய கலையுலகின் தன்னிகரற்ற ஆளுமை கலைஞானி – மாநிலங்களவை உறுப்பினரும் – மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சாருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் பாசிசத்துக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் – நாடாளுமன்றத்திலும் ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் குரல் வெல்லட்டும். அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கட்டும். அன்பும் வாழ்த்தும்!

அன்புமணி ராமதாஸ்: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், எனது நண்பருமான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நூறாண்டு நோயில்லா நிறைவாழ்வு வாழவும், சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகிறேன்.

வைரமுத்து: இந்தியக் கலைஅடையாளங்களுள் ஒருவர் கலைஞானி கமல்ஹாசன். கலையே வாழ்வாய்; வாழ்வே கலையாய்; மாறிப்போன மனிதர்.

வாழ்வியல் புயல்களையும் விமர்சனச் சூறாவளிகளையும் தாண்டி அவர் என்ன காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறாரோ அந்தக் காரணங்கள் வாழ்வெல்லாம் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.