சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் அளிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றபட்பட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது உண்மையல்ல என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானவை என்றும் […]