தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்​கள் தெரி​வித்​த​தாவது: அனில் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் குழும நிறு​வனங்​கள் வங்​கி​களில் கடன்​பெற்று அதனை முறை​யாக செலவு செய்​யாமல் பணமோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை ஏற்​கெனவே சோதனை நடத்தி அனில் அம்​பானி குழும நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான ரூ.7,500 கோடி மதிப்​பிலான சொத்​துகளை முடக்​கி​யுள்​ளது.

இந்த நிலை​யில், பாரத ஸ்டேட் வங்​கி​யில் (எஸ்​பிஐ) கடன்​பெற்று மோசடி செய்​தது தொடர்​பாக விசா​ரணை நடத்த நவம்​பர் 14-ம் தேதி நேரில் ஆஜராகும்​படி அனில் அம்​பானிக்கு அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது.

கடந்த ஜூலை 24-ம் தேதி நடை​பெற்ற சோதனை தொடர்​பாக அனில் அம்​பானி​யிடம் ஆகஸ்ட் மாதம் விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்டு அவர் வெளி​நாடு செல்ல தடை​வி​திக்​கப்​பட்​டது. இந்த நிலை​யில், இரண்​டாவது முறை​யாக அவருக்கு அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.