புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

புதுடெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்​பாக தாக்​கல் செய்​யப்​பட்ட நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 3 வாரங்​களுக்​குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ண​சாமி சார்​பில் வழக்​கறிஞர் எம்.வீர​ராகவன் தாக்​கல் செய்​துள்ள நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில், தற்​போதுள்ள டிஜிபி பதவிக்​காலம் முடி​யும் முன்​னரே, அடுத்த டிஜிபிக்​கான பெயர் பட்​டியலை யுபிஎஸ்​சிக்கு குறைந்​த​பட்​சம் 3 மாதங்​களுக்கு முன் அனுப்பி வைக்க வேண்​டும். தற்​காலிக டிஜிபி என யாரை​யும் எந்த மாநில​மும் நியமிக்​கக் கூடாது எனப் பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்த உத்​தரவை தமிழக அரசு அமல்​படுத்​த​வில்​லை.

இதற்​காக தமிழக தலைமை செய​லா​ள​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தெரி​வித்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமை​கள் செயல்​பாட்​டாளர் ஹென்றி திபேன் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் தமிழக அரசு அனுப்​பி​யுள்ள பெயர் பட்​டியலை விரைந்து யுபிஎஸ்சி பரிசீலிக்க வேண்​டும். யுபிஎஸ்சி பரிந்​துரை​யின் பேரில் நிரந்தர டிஜிபியை தமிழக அரசு விரைந்து நியமிக்க வேண்​டும் என உத்​தர​விட்​டது. மேலும் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கை​யும் கடந்த செப்​.7-ம் தேதி முடித்து வைத்​தது.

இந்​நிலை​யில், யுபிஎஸ்சி பரிந்​துரைத்​தும் டிஜிபியை நியமிக்க தமிழக அரசு மறுத்து வரு​கிறது. நிரந்தர டிஜிபியை நியமிக்​காமல், ஆளுங்​கட்​சிக்கு சாத​மாக செயல்​படும் வகை​யில் தற்​காலிக டிஜிபி பணி​யில் தொடர்​கிறார். இந்த விவ​காரத்​தில் கடுமை​யான உத்​தர​வு​களை பிறப்​பிக்​கும் வரை உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவை தமிழக அரசு செயல்​படுத்​தாது.

எனவே, பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை நடை​முறைப்​படுத்​தாமல் இருக்​கும் தமிழக அரசின் தலை​மைச் செயலருக்கு எதி​ராக நீதி​மன்ற நடவடிக்கை எடுக்க வேண்​டும். பிர​காஷ் சிங் வழக்​கின் தீர்ப்​பின்​படி விரைந்து டிஜிபியை நியமிக்க உத்​தர​விட வேண்​டும் என்று கிஷோர் கிருஷ்ண​சாமி சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை உச்ச நீதி​மன்றதலைமை நீதிபதி பி.ஆர். கவாய்தலை​மையி​லான அமர்வு நேற்று விசா​ரித்​தது. மனு​தா​ரர்சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பிர​சாந்த் பூஷண் ஆஜரானார். தமிழக அரசின் சார்​பில் பதில் மனுத்​தாக்​கல் செய்ய அவகாசம் கோரியதை தொடர்ந்​து,3 வாரங்​களுக்​குள்​ பதில்​ மனு தாக்​கல்​ செய்​ய நீதிபதிகள் அமர்வு உத்​தர​விட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.