இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் முழுமையான அட்ஜெஸ்டபிள் சார்ந்த சஸ்பென்ஷனை பெற்ற டக்கார் எடிசனை 2025 EICMA அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
Hero Xpulse 210 Dakar Edition
ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் டக்கார் ரேலியில் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் அடிப்படையில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான டெலிஸ்கோபிக் முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 280 மிமீ பயணிக்கின்ற சஸ்பென்ஷனை பயன்படுத்தி 270 மிமீ ஆக கிரவுண்ட் கிளியரண்ஸ் ஆக மாற்றப்பட்டு, முழுமையான ஆஃப் ரோடுக்கான மேக்ஸிஸ் டயர்களையும் பொருத்தியுள்ளது.
வழக்கமான எக்ஸ்பல்ஸ் 210 மாடலில் 210 மிமீ மற்றும் பின்புறத்தில் 205 மிமீ மட்டுமே பயணிக்கின்ற நிலையில் 220 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் மட்டுமே கொண்டுள்ளது.
வெள்ளை, சிவப்பு நிறத்தை பெற்றுள்ள இந்த சிறப்பு டக்கார் பதிப்பில் பல்வேறு இடங்களில் டக்கார் பேட்ஜிங் மற்றும் எழுத்துகள், மேலும் ஹீரோ சார்பாக பங்கேற்று வெற்றியை பெற்று தந்த ரோஸ் பிரான்ச் கையொப்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
அடுத்த சில மாதங்களுக்குள் புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விற்பனைக்கு ரூ.2 லட்சத்துக்குள் எதிர்பார்க்கலாம்.






