ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்​கிரஸும் ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஆதர​வாக செயல்​படு​கின்றன என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டி உள்​ளார்.

பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக வரும் 11-ம் தேதி 122 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு தேர்​தல் நடக்​கிறது. அரரியா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 15 ஆண்​டு​கள் ஆட்சி நடத்​தி​யது. அன்​றைய காட்​டாட்​சி​யில் பிஹாரின் வளர்ச்சி பூஜ்ஜிய​மாக இருந்​தது. புதிய நெடுஞ்​சாலைகள், பாலங்​கள் கட்​டப்​பட​வில்​லை. புதிய கல்வி நிறு​வனங்​கள் தொடங்​கப்​பட​வில்​லை.

முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு பிஹார் மாநிலம் அபரித​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. மாநிலம் முழு​வதும் ஏராள​மான விரைவு சாலைகள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. ஏராள​மான புதிய பாலங்​கள் கட்​டப்​பட்டு உள்​ளன. புதி​தாக 4 மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன.

பிஹார் மாநில வளர்ச்​சிக்கு ஊடுரு​வல்​காரர்​கள் மிகப்​பெரிய தடை​யாக உள்​ளனர். நாட்​டில் இருந்து ஊடுரு​வல்​காரர்​களை வெளி​யேற்ற மத்​திய அரசும் பிஹார் மாநில அரசும் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்​றன. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்​கிரஸும் ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஆதர​வாக செயல்​படு​கின்​றன.

பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யின்​போது ஊடுரு​வல்​காரர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. ஆனால் அவர்​களுக்கு ஆதர​வாக ராகுல் காந்​தி​யும், தேஜஸ்வி யாத​வும் யாத்​திரை மேற்​கொண்​டனர். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் கூட்​டணி ஆட்சி அமைத்​தால் ஊடுரு​வல்​காரர்​கள் பிஹாருக்​குள் பின்​வாசல் வழி​யாக நுழை​வார்​கள்.

சத்தி மையா வழி​பாடு, ஒரு நாடகம் என்று காங்​கிரஸ் தலைமை குற்​றம் சாட்​டியது. அயோத்தி ராமர் கோயிலுக்கு காங்​கிரஸ் மேலிட தலை​வர்​கள் ஒரு​முறை கூட செல்​ல​வில்​லை. உத்தர பிரதேசம், பிர​யாக்​ராஜில் மகா கும்​பமேளா நடை​பெற்​ற​போது காங்​கிரஸ் தலை​வர்​கள் விமர்​சனம் செய்​தனர்.

வாக்கு வங்கி அரசி​யல் காரண​மாக ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்​ஜேடி), காங்​கிரஸும் பகவான் ராமரை வெறுக்​கின்​றன. நிஷாத் ராஜ், ஷப்ரி மாதா, மகரிஷி வால்​மீகி கோயில்​களுக்கு கூட ஆர்​ஜேடி, காங்​கிரஸ் தலை​வர்​கள் செல்​வது கிடை​யாது. இதன்​மூலம் பிற்​படுத்​தப்​பட்ட, பட்​டியலின மக்​களை​யும் அவர்​கள் வெறுக்​கின்​றனர் என்​பது தெளி​வாகிறது.

மெகா கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ராக தேஜஸ்வி யாதவை முன்​னிறுத்த காங்​கிரஸ் விரும்​ப​வில்​லை. இதன்​காரண​மாக ஆர்​ஜேடி, காங்​கிரஸுக்கு இடையே மோதல் நீடித்து வரு​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பிரச்​சார கூட்​டங்​களில் மக்​கள் பெருந்​திரளாக கூடு​கின்​றனர். இதன்​மூலம் எங்​கள் கூட்​ட​ணி​யின் வெற்றி உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.