மணிலா,
பசிபிக் பெருங்கடலில் உருவான கால்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை புரட்டிப் போட்டது. பிலிப்பைன்சின் பாலவான் தீவு அருகே கரையை புயல் கடந்தபோது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இந்த வெள்ளப்பெருக்கால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பல ஆறுகள் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு பிலிப்பைன்சில் சுமார் 80 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகி இருந்ததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த மீட்பு பணியில் 100-க்கும் மேற்பட்டோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது.