பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக 122 தொகு​தி​களில் நாளை சட்டப்பேரவை தேர்​தல் நடைபெறுகிறது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை​யுடன் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது.

பிஹாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அங்கு இரண்டு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடத்​தப்​படும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இதன்​படி கடந்த 6-ம் தேதி 121 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் 65.08 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

இரண்​டாம் கட்​ட​மாக நாளை 122 தொகு​தி​களில் தேர்​தல் நடக்​கிறது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை 5 மணி​யுடன் பிரச்​சா​ரம் ஓய்ந்தது. நிறைவு நாளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் முதல்​வர் நிதிஷ் குமார், மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங், உத்தரபிரதேச முதல்​வர் யோகி ஆதித்ய நாத் உள்​ளிட்​டோர் தீவிர வாக்​கு சேகரிப்​பில் ஈடு​பட்​டனர். மெகாகூட்​டணி சார்​பில் ஆர்​ஜேடி மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் வாக்கு சேகரித்​தனர்.

இரண்​டாம் கட்ட தேர்​தலில் 136 பெண்​கள் உட்பட 1,302 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். வாக்​குப்​ப​திவு ஏற்​பாடு​கள் குறித்து தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கூறிய​தாவது: 20 மாவட்​டங்​களை சேர்ந்த 122 சட்​டப்​பேர​வை தொகு​தி​களில் நவ.11-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இந்த தொகு​தி​களில் 3.7 கோடி வாக்​காளர்​கள் உள்​ளனர். இதில் 1.95 கோடி பேர் ஆண்​கள். 1.74 கோடி பேர் பெண்​கள் ஆவர். மூன்​றாம் பாலினத்​தவர்​கள் 943 பேர் உள்​ளனர்.

45,399 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்டுள்​ளன. வாக்​குச்சாவடிகளில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டுள்​ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்​குப்​ப​திவு நடை​பெறும். பதற்​ற​மான வாக்குச்​சாவடிகளில் மட்​டும் மாலை 4 மணிக்கே வாக்​குப்​ப​திவு நிறைவடை​யும். இந்த வாக்​குச் சாவடிகளில் துப்​பாக்கி ஏந்​திய துணை ராணுவ வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக நேபாள எல்லை மூடப்​பட்டுள்​ளது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

இரண்​டாம் கட்ட தேர்​தல் குறித்து அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: கடந்த 2020-ம் ஆண்டு தேர்​தலின் ​போது 122 தொகு​திகளில் மிக அதி​கபட்​ச​மாக பாஜக 42 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. அதன் கூட்​டணி கட்​சி​யான ஐக்​கிய ஜனதா தளத்​துக்கு 20 தொகு​தி​கள் மட்டுமே கிடைத்​தன. ஆர்​ஜேடி-க்கு 33, அதன் கூட்​டணி கட்​சி​யான காங்​கிரஸுக்கு 11, கம்​யூனிஸ்ட் கட்​சிகளுக்கு 5 இடங்​கள் கிடைத்​தன. ஏற்​கெனவே வெற்றி பெற்ற தொகு​தி​களை தக்க வைக்​க​வும், கூடு​தல்தொகு​தி​களில் வெற்றி பெற​வும் தேசிய ஜனநாயக கூட்​டணி, மெகா கூட்​டணி தலை​வர்​கள் தீவிர பிரச்​சா​ரம் செய்​துள்​ளனர்.

பிஹாரின் சீமாஞ்​சல் பகுதி மக்​கள்தொகை​யில் சுமார் 17 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள் ஆவர். இவர்​களது வாக்​கு​களைப் பெற மெகா கூட்​ட​ணி – ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் இடையே கடும் போட்டி நில​வு​கிறது. இவ்​வாறு அவர்கள் தெரிவித்​தனர்.

பாதுகாப்பு பணியில் 4 லட்சம் பேர்: இரண்டாம் கட்ட தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிஹார் டிஜிபி வினய் குமார் கூறியதாவது: பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 7 மாவட்டங்கள் நேபாள எல்லையில் உள்ளன. இதனால், 726 கி.மீ. தூர எல்லை மூடப்பட்டுள்ளது. நேபாளத்தில் இருந்து வரும் வாகனங்கள் பிஹாரில் நுழைய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநில போலீஸார், துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படை உட்பட சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாட்னாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து 122 தொகுதிகளின் வாக்குப்பதிவும் முழுமையாக கண்காணிக்கப்படும்.

முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு
களுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.