2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்

தங்கம் விலை இந்த ஆண்டு தாறுமாறாக ஏறியிருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,000 முதல் ரூ.12,000 வரை சென்றது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.57,000-லிருந்து ரூ.97,000 வரை பல பல உச்சங்களைத் தொட்டது.

சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலரரைத் தாண்டியது.

அடுத்த ஆண்டு, அதாவது 2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும் என்று சில அமைப்புகள் கணித்துள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

தங்கம்
தங்கம்

*இந்த விலைகள் ஒரு அவுன்ஸிற்கானது.

உலக வங்கி: 2026-ம் ஆண்டு சராசரியாக 3,575 டாலர்.

Citi: முதல் மூன்று‌ மாதங்களில் 3,840 டாலர். இது அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும்.

Goldman Sachs: 2026-ம் ஆண்டு முதல் காலாண்டில் 4,440 டாலர். ஆண்டின்‌ இறுதியில்‌ 4,900 டாலர். இது உலக முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும்.

Morgan Stanley: 2026-ம் ஆண்டு மத்தியில் 4,500 டாலர். இது உலக நிதி சேவை நிறுவனம்.

Wells Fargo: 2026-ம் ஆண்டு இறுதியில் 4,500 – 4,700 டாலர். இது அமெரிக்காவைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனம்.

UOB: 2026-ம் ஆண்டு 4,600 டாலர். இது சிங்கப்பூர் வங்கி ஆகும்.

UBS: 2026-ம் ஆண்டு மார்ச்‌ மாதத்தில் 4,700 டாலர். இது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும்.

தங்கம்
தங்கம்

LBMA Representative: 2026-ம்‌ ஆண்டு 4,980 டாலர். இது லண்டன் பொன் சந்தை சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளின்‌ கணிப்பு.

HSBC, BoFA, SocGen: 2026-ம்‌ ஆண்டு 5,000 டாலர். முறையே ஹாங்காங், அமெரிக்கா பிரான்ஸ் வங்கிகள் ஆகும்.

JP Morgan: 2026-ம் ஆண்டு நான்காம் காலாண்டில் 5,055 டாலர். அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 டாலர். இது அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.