CSK டார்கெட் செய்யும் 3 சிறப்பான ஆல்-ரவுண்டர்கள்; கேம்ரூன் கிரீன், மிட்செல் ஓவன் இல்லை!

Chennai Super Kings Target These 3 All Rounders: ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மினி ஏலம் (IPL 2026 Mini Auction) நடத்தப்பட இருக்கிறது. இந்தாண்டு மினி ஏலம் டெல்லியில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. மினி ஏலத்தை முன்னிட்டு வீரர்கள் தக்கவைக்கும் பட்டியலை வரும் நவ. 15ஆம் தேதி அன்று அனைத்து அணிகளும் வெளியிட இருக்கின்றன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

Add Zee News as a Preferred Source

IPL Mini Auction 2026: அதிக வீரர்களை விடுவிக்கும் 3 அணிகள்

வரும் சனிக்கிழமை அன்று 10 அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்திருக்கிறது?, எந்தெந்த வீரர்களை விடுவிக்கும்?, ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை டார்கெட் செய்யும்?, ஒவ்வொரு அணிக்கும் அதன் பர்ஸில் எவ்வளவு இருப்புத் தொகை இருக்கும்? போன்ற விவரங்கள் தெரிந்துவிடும். அந்த வகையில், கடந்த சீசனில் கடைசி மூன்று இடங்களை பிடித்த அணிகள் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் அதிக வீரர்களை மினி ஏலத்தில் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக வீரர்களை விடுவிக்கும் அணிகளுக்கு பர்ஸ் தொகையில் இருப்பு அதிகமாக இருக்கும். அந்த அணிகள் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களை அதிக தொகைக்கு வாங்க வாய்ப்புள்ளது. எந்த அணி அதிக வீரர்களை விடுவித்து, அதிக தொகையுடன் மினி ஏலத்திற்கு நுழையப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

CSK IPL Mini Auction Target: சிஎஸ்கேவின் தேவை என்ன?

ஆனால் ஏலத்திற்கு முன்னரே,  சிஎஸ்கே அணியின் (Chennai Super Kings) தேவை என்ன என்பது ஏறத்தாழ அனைவருக்குமே தெரியும். சிஎஸ்கே அணிக்கு நல்ல ஆல்-ரவுண்டர்களின் தேவை அதிகமாக உள்ளது. அது சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தாலும் சரி, வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தாலும் சரி… அவர்கள் பினிஷர்களாக, பின்வரிசையில் விளையாடுபவர்களாக இருந்தால் கூடுதல் சிறப்பு. அஸ்வின் ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்டார், சாம் கரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரில் ஒருவரை மட்டுமே சிஎஸ்கே தக்கவைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இரண்டு ஆல்-ரவுண்டர்களை கண்டைடய வேண்டும் என சிஎஸ்கே திட்டமிடும்.  

CSK IPL Mini Auction Target: அந்த மூன்று ஆல்-ரவுண்டர்கள்

அந்த வகையில், வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்களான கேம்ரூன் கிரீன், மிட்செல் ஓவன் ஆகியோர்தான் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு சிஎஸ்கே உள்பட பல அணிகள் போட்டிப்போடும். ஆனால், அதே நேரத்தில் இவர்கள் இருவரும் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் வீரர்கள் என்பதால்  சிஎஸ்கே இவர்களை மட்டுமின்றி இன்னும் சில ஆல்-ரவுண்டர்களையும் உற்றுநோக்கும். இந்நிலையில், வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்க வாய்ப்புள்ள 3 ஆல்-ரவுண்டர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

CSK IPL Mini Auction Target: சிக்கந்தர் ராசா

ஜிம்பாப்வே வீரரான சிக்கந்தர் ராசா (Sikandar Raza), உலகம் முழுவதும் பல டி20 லீக் தொடர்களில் விளையாடி சிறப்பான பந்துவீச்சு அனுபவத்தை கொண்டுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் பெரியளவு சோபித்ததில்லை. 2023, 2024 சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 9 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 182 ரன்களையும், 7 இன்னிங்ஸில் 3 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இவரை சிஎஸ்கே விளையாட வைத்தால், பவர்பிளேவில் ஒரு ஓவரை வீச வைக்கலாம். மிடில் மற்றும் டெத் ஓவர்களிலும் பயன்படுத்தலாம். பேட்டிங்கில் நம்பர் 8இல் இறக்கலாம். இவர் குறைந்த தொகையில் கிடைக்க வாய்ப்புள்ளது. 

CSK IPL Mini Auction Target: ஜேசன் ஹோல்டர்

மேற்கு இந்திய தீவுகள் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர்களில் ஜேசன் ஹோல்டர் (Jason Holder), இந்தாண்டு மினி ஏலத்தில் வருகிறார். 34 வயதான ஹோல்டர் இன்னும் திடமாக விளையாடி வருகிறார். இவர் கடந்த சீசனில் யாராலும் எடுக்கப்படாவிட்டாலும் தற்போது இவர் மீதும் வெளிச்சம் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இவர் முதல்முறை விளையாடி அணி, சிஎஸ்கே ஆகும். அதற்கு பின் ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ அணிகளில் விளையாடியிருக்கிறார். இவர் 46 பந்துகளில் 53 விக்கெட்டையும், 27 இன்னிங்ஸில் 259 ரன்களையும் ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளார். பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவரையும் சிஎஸ்கே நம்பர் 8இல் களமிறக்கலாம். பினிஷர், டெத் ஓவர் பிரச்னை ஓரளவு தீர்ந்துவிடும்.

CSK IPL Mini Auction Target: கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அதிரடி வீரரான மேக்ஸ்வெல் (Glenn Maxwell) தற்போது பார்மிலேயே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இவருக்கு கடந்த சீசனில் அதிக போட்டிகள் வாய்ப்பளிக்கப்பட்டது, ஆனால் பெரிதாக சோபிக்கவில்லை. அதன் பின் காயம் காரணமாக வெளியேறினார். ஆஸ்திரேலிய அணிக்காகவும் அவர் பெரிதாக சமீபத்தில் சோபிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி, மும்பை, பஞ்சாப், ஆர்சிபி அணிகளுக்காக இதுவரை விளையாடி மொத்தம் 135 இன்னிங்ஸில் 2819 ரன்களை குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 85 இன்னிங்ஸில் 41 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். இவரை சிஎஸ்கே நம்பர் 5, நம்பர் 6 இடத்தில் பயன்படுத்தலாம். பினிஷர் பிரச்னை தீரும். 

மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்காக இந்த 3 வீரர்களை விட்டுக்கொடுக்க தயாராகும் சிஎஸ்கே?

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் 5 பேர்! மீண்டும் முக்கிய வீரரை எடுக்கும் சிஎஸ்கே?

மேலும் படிக்க | சஞ்சு சாம்சனை இழுக்கும் CSK… அப்போ இந்த வீரர் RR போகிறாரா? ஜடேஜா இல்லை!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.