“இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" – நடிகை கெளரி கிஷன்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ போன்ற திரைப்படங்களிலும், மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துத் பிரபலமானார்.

தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் ஹிரோவிடம் “கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?” என்று கேள்வி கேட்டது பெரும் சர்ச்சைக் கிளப்பியிருந்தது.

Gouri Kishan Interview
Gouri Kishan Interview

இதுகுறித்து கோபத்துடன் பேசிய கெளரி, “என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள்,” என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

இதையடுத்து நடிகை கெளரி கிஷனுக்கு தமிழ், மலையாளம் திரையுலகில் இருந்து ஆதரவுகள் குவிந்தன. பலரும் அந்த பத்திரிகையாளரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்.எஸ். கார்த்தி என்ற அந்த யூடியூப் சினிமா பத்திரிகையாளர், “உடல் எடை குறித்து ஜாலியாக நான் கேட்ட கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. நான் கேட்ட கேள்வி நடிகை கெளரி கிஷனின் மனதைப் புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ஆனால், தான் கேள்வி கேட்டது தவறுதான் என்று ஒப்புக் கொள்ளாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நடிகை கெளரி கிஷன், “தனது தவறையே தவறாக உணராமல், ‘நான் ஜாலியாகக் கேட்ட கேள்வியைத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நான் யாரையும் உடல் ரீதியாக கேலியோ, அவமானமோ செய்யவில்லை’ என்று மீண்டும் பொறுப்பில்லாமல் பேசியிருக்கிறார்.

கேட்ட கேள்வி தவறுதான் என ஒத்துக் கொண்டு தெளிவாக மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறை மறைத்து ‘தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது’ என்று வருத்தம் தெரிவிப்பதால் எந்தப் பயனுமில்லை. தவறை உணர்வதுதான் முக்கியம். இதுபோன்ற வெற்று வருத்தங்களையும், வெற்று வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” என்று கூறியிருக்கிறார் நடிகை கெளரி கிஷன்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.