சொத்து விவரங்கள் அளிக்காத 5 அமைச்சர்கள், 67 எம்எல்ஏக்கள்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் எம்​பி, எம்​எல்​ஏக்​கள், எம்​எல்​சிக்​கள், அமைச்​சர்​கள், முதல்​வர், ஆளுநர் உள்​ளிட்ட மக்​கள் பிர​தி​நி​தி​கள், அரசு ஊழியர்​கள் ஆண்​டு​தோறும் தங்​களின் சொத்து விவரங்​களை ஊழல் கண்​காணிப்​பக​மான‌ லோக் ஆயுக்​தா​வில் தாக்​கல் செய்ய வேண்​டும் என சட்ட விதி​கள் 22, 22(1) வலி​யுறுத்​துகின்​றன‌.

நடப்​பாண்​டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்​குள் சொத்து விவரங்​களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்​கள் ஆன பிறகும் பெரும்​பாலான பிர​தி​நி​தி​கள் சொத்து விவரங்​களை தாக்​கல் செய்​ய​வில்லை. இதுகுறித்து லோக் ஆயுக்தா வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கர்​நாடக அமைச்​சர்கள் கே.ஹெச். முனியப்​பா, தினேஷ் குண்​டு​ராவ், ஜமீர் அகமது கான், ரஹீம் கான், வெங்​கடேஷ் ஆகியோர் சொத்து கணக்கை அளிக்கவில்​லை.காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் ராஜண்​ணா, லட்​சுமண் சவதி உள்​ளிட்ட 44 பேரும், பாஜக எம்​எல்​ஏக்​கள் சித்​து​பாட்​டீல், தினகர் கேசவ் ஷெட்டி உள்​ளிட்ட 10 பேரும், மஜத எம்​எல்​ஏக்​கள் ரேவண்​ணா, சுரேஷ் பாபு ஆகிய 9 பேரும், இதர கட்​சிகளை சேர்ந்த 5 பேரும் என மொத்​த​மாக 68 எம்​எல்​ஏக்​களும் தங்​களின் சொத்து கணக்கை தாக்​கல் செய்​ய​வில்​லை.

காங்​கிரஸை சேர்ந்த 13 பேர், பாஜகவில் 10 பேர், மஜதவில் 5 பேர் என 28 எம்எல்சிக்கள் சொத்து விவரங்​களை சமர்ப்​பிக்​க​வில்​லை. இவ்​வாறு அறிக்கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.