கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் நடிகையாகவும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார் ஆண்ட்ரியா.
“வெற்றி சாரை ஃப்ரெண்டாக நம்பிட்டேன்” – Kavin
இசைவெளியீட்டு விழாவில் பேசிய கவின், “அன்னன்னைக்கு விஷயங்களை நல்லபடியா முடிச்சா அந்த குட்டி குட்டி சந்தோஷங்கள் நம்மளை போக வேண்டிய இடத்துக்குக கூட்டிகிட்டு போகும்னு நம்புறேன். இந்த நாளுக்கு நான் ரொம்ப நன்றியுடன் இருப்பேன்.
பீட்சா படத்துலதான் என்னுடைய முகம் முதல்முதலா தியேட்டரில் வந்தது. ஒன்னுமே இல்லாத ஆளா இருந்தாலும் நாம உண்மையா வேலை செஞ்சா நாம ஆசைபட்டது நமக்கு நடக்கும்ங்கிற நம்பிக்கையை விதைச்ச பலபேருல சேது அண்ணாவும் ஒருத்தர்.

வெற்றி சார்கிட்ட இருந்துதான் இந்த படம் ஆரம்பிச்சது. அவரேதான் கதை சொன்னார். அவர் அந்த கதைமேல வச்சிருக்கிற நம்பிக்கைதான் நான் வச்ச நம்பிக்கை. அவர்கிட்ட, ‘உங்கள நம்பிதான் உள்ள வரேன், நீங்க பாத்துக்கங்க சார்’ன்னு சொன்னேன்.
முதல் மீட்டிங்கில் ஒரு பெரிய ஆள்கிட்ட போற ஃபீலிங்கே இல்ல. போக போக ரொம்ப ஜாலி ஆகிடுச்சு. கால் பண்ணிட்டு சும்மாதான் அடிச்சேன்னு சொல்லுவார். ‘என்னடா சார் சும்மா இருக்கும்போது நமக்கு அடிக்கிறாரா’ன்னு யோசிப்பேன். நானும் திரும்ப சும்மா அடிப்பேன். ‘சார் செட்டுக்கு வாங்க போர் அடிக்கு’ன்னு சொல்வேன்.
அவர் என்னை ஃப்ரெண்டா நினைச்சாரான்னு தெரியல, நான் அவரை ஃப்ரெண்டா நம்பிட்டேன். இந்த பஸ் நின்னபிறகு திரும்ப ஏற முடியுமான்னு தெரியல, அதனால ஜன்னல்ல காத்து அடிக்கிற வர காத்த ஃபுல்லா வாங்கிக்க வேண்டியதான்னு சந்தோஷமா இருந்தேன். படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு சந்தோஷமா இருந்தாலும் இந்த பயணம் முடியுறது ஒரு பக்கம் வருத்தமா இருக்கு.

ஒருநாள் சார் கொஞ்சம் டவுன்னா இருந்தார். அப்ப, ‘நானும் சொக்குவும் ஒரே நேரத்துலதான் சினிமாக்கு வந்தோம். நான் அசிஸ்டண்ட் டிரைக்டரா சேர்ந்தபோது சொக்கு அசிஸ்டண்ட் மேனேஜரா ஆனாரு. இப்ப அவர் தயாரிப்பாளரா முதல் படம் பண்ணுறாரு. நல்லபடியா இந்த படம் சரியா போகணும்னு’ அப்படின்னு சொன்னாரு. நான், ‘என்ன சார் சிச்சுவேஷன் ஆடுகளம் இன்டெர்வல் பிளாக் மாதிரி இருக்கு, நீங்க தனுஷ் சார், நான் உங்க கையில இருக்குற சேவலா சாரர’ அப்படின்னேன்…. கண்டிப்பா பந்தையம் அடிச்சுடும்னு நம்புறேன் சார்.” எனப் பேசினார்.
தொடர்ந்து குழுவினர் குறித்துப் பேசியவர் ஆண்ட்ரியாவிடம், “மனுஷி படமும் பிசாசு 2வும் நான் பாக்கலை. அதில பயங்கரமா நடிச்சிருக்கீங்கன்னு கேள்விபட்டேன். இந்த படத்துக்குப் பிறகு அது எல்லாம் கூடிவரும்னு நம்புறேன்.” என்றார்.
தொடர்ந்து, “டைரக்டர் விக்கர்னன் நிறைய பேசுவார்னு தெரியும். இன்னைக்கு சரியா பேசிட்டாரு. படம் நல்ல படியா போகணும், இன்னொரு பெரிய ஹீரோ அவருக்கு கால் பண்ணனும். பெரிய இடத்துக்கு அவர் போகணும். இதெல்லாம் நடக்கும்னு நான் நம்புறேன்.
ஒரு வேலை பாக்குற என்கிட்டயே டைம் மேனேஜ்மென்ட் பத்தி கேக்குறாங்க, ஜிவி சார் பாடுறாரு, மியூசிக் போடுறாரு, நடிக்கிறாரு, கான்சர்ட் பண்ணுறாரு… தூங்க டைம் இருக்கா சார்… உடம்ப பாத்துக்கங்க.
நமக்கு ஒரு சின்ன சின்ன ஆசை உள்ள லிஸ்ட் இருக்கும்ல… அந்த மாதிரி என் லிஸ்ட்ல ஜிவி சார் மியூசிக்ல நான் வரணும். அதை டிக் பண்ணிடுவேன். உங்களுக்கு ஹிட் மிஷின்னு ஒரு பேரு வச்சிருக்காங்க சார், அந்த மிஷின் இந்த படத்தை தள்ளிரும்னு நம்புறேன்.
அமரன் ஒரு ஜானரில் இருக்கும், பராசக்தி சிங்கிள் ஒரு ஜானர், குட் பேட் அக்லி ஒரு ஜானர்… இப்படி ஒருஒரு ஜானரிலிருந்து இந்த படத்துக்கு ஒரு பாடல் கிடைச்சிருக்கு. இந்த ஆல்பம் ரிலீஸுக்குப் பிறகு மக்களை அதிகமா போய் சேரும்னு நம்புறேன்” எனப் பேசினார்.