சென்னை: SIR என்ற சொல்லை கேட்டாலே தி.மு.க. அலறுகிறது, முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்புகிறார் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கு நிரந்தர டிஜிபி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என்றும் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதல்வர் ஸ்டாலினே எஸ்ஐஆருக்கு எதிராக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். […]