U19 முத்தரப்பு தொடர்: டிராவிட் மகன் என்பதால் வாய்ப்பா? வைபவ், மாத்ரே இல்லை.. ஷாக்!

U19 Triangular Series No Vaibav Suryavanshi & ayush Matre: U19 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனைத்து வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பிசிசிஐ-யும் வீரர்களை தேர்வு செய்வதில் முணைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக பிசிசிஐ முத்தரப்பு தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி பெங்களூரில் நவம்பர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆ,ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இத்தொடரில் இந்தியா ஏ மற்றும் பி அணி என இரண்டு அணிகளாக பங்கு பெற உள்ளது. மூன்றாவது அணியாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்க உள்ளது. 

Add Zee News as a Preferred Source

வைபவ் சூர்யவன்சி, மாத்ரே இல்லை – டிராவிட் மகனுக்கு வாய்ப்பு

இதற்கான அணியை பிசிசிஐ நேற்று (நவம்பர் 11) அறிவித்தது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் வைபவ் சூர்யவன்சி மற்றும் ஆயுஷ் மாத்ரேக்கு இடம் வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பிசிசிஐயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலரும் அன்வே, டிராவிட்டின் மகன் என்பதால் அணியில் எடுத்திருக்கிறீர்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்சி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவருக்கு வாய்ப்பளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இருவரையும் ஏன் எடுக்கவில்லை – பிசிசிஐ விளக்கம்

இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, வைபவ் சூர்யவன்சி மற்றும் அயுஷ் மாத்ரே ஆகியோரின் பெயரை நாங்கள் பரிசீலிக்கவே இல்லை. ஏனென்றால் அவர்கள் இதே காலகட்டத்தில் நவம்பர் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஓமனில் நடைபெறும் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவன்சி இடம் பெற்றுள்ளார். அதேபோல், ஆயுஷ் மாத்ரே ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறார். இதனாலேயே அவர்களது பெயரை நாங்கள் கணக்கில் எடுக்கவில்லை என கூறி உள்ளது. 

முத்தரப்பு தொடருக்கான இந்தியா ஏ மற்றும் பி அணி

இந்திய U19 A அணி: விஹான் மல்ஹோத்ரா (கேப்டன்) (PCA), அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்) (MCA), வாஃபி கச்சி (HYD CA), வான்ஷ் ஆச்சார்யா (SCA), வினீத் V.K (TNCA), லக்ஷ்யா ரைச்சந்தானி (CAU), ஏ. ரபோல் (WK) (HYD CA), கனிஷ்க் சௌஹான் (HAR), கிலன் ஏ படேல் (GCA), அன்மோல்ஜீத் சிங் (BCA), முகமது எனான் (KCA), ஹெனில் படேல் (GCA), அசுதோஷ் மஹிதா (BCA), ஆதித்யா ராவத் (CAU), முகமது மாலிக் (HYD CA). 

இந்தியா U19 B அணி: ஆரோன் ஜார்ஜ் (கேப்டன்) (HYD CA), வேதாந்த் திரிவேதி (துணை கேப்டன்) (GCA), யுவராஜ் கோஹில் (SCA), மௌல்யராஜ்சிங் சாவ்தா (GCA), ராகுல் குமார் (PCA), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்) (SCA), அன்வே டிராவிட் (WK) (KSCA), ஆர்.எஸ். அம்ப்ரீஷ் (TNCA), பி.கே. கிஷோர் (TNCA), நமன் புஷ்பக் (MCA), ஹேம்சுதேஷன் ஜே (TNCA), உத்தவ் மோகன் (DDCA), இஷான் சூட் (PCA), D தீபேஷ் (TNCA), ரோஹித் குமார் தாஸ் (CAB).

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.