போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்: காவலர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

மதுரை: மதுரை அருகே போலீஸ் வாக​னம் மோதி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் காவலர்​களை கைது செய்​யக் கோரி உறவினர்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மதுரை மேலூர் அருகே உள்ள சிட்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் பிர​சாத் (25).

இவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்​வின் (2). இந்நிலை​யில், அனஞ்​சி​யூர் பகு​தி​யில் இறந்த உறவினர் ஒரு​வரின் வீட்​டுக்கு துக்​கம் விசா​ரிப்​ப​தற்​காக இருசக்கர வாக​னத்​தில் மனை​வி, குழந்​தை​யுடன் பிர​சாத் நேற்று முன்​தினம் சென்​றார்.

பின்​னர் அங்​கிருந்து மதுரை நோக்கி வந்​த​போது, சக்​குடி அருகே எதிரே வந்த ராம​நாத​புரம் மாவட்ட போலீஸ் வாக​னம், இரு சக்கர வாக​னம் மீது மோதி​யது. இதில் பிர​சாத், சத்​யா, அஷ்​வின் ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். அவர்​களின் உடல்​களை மீட்ட பூவந்தி போலீ​ஸார், பிரேதப் பரிசோதனைக்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலை​யில், மூவரின் உடல்​களை வாங்க குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்​கள் நேற்று மறுத்​து​விட்​டனர். மேலும், மருத்​து​வ​மனை அருகே சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

விபத்து ஏற்​படுத்​திய போலீஸ் வாக​னத்​திலிருந்த 5 காவலர்​களை கைது செய்ய வேண்​டும், உயி​ரிழந்த குடும்​பத்​தினருக்கு நிவாரணம் வழங்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​தனர். அவர்​களிடம் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அதில் சமரசம் ஏற்​ப​டாத​தால், மூவரின் உடல்​களை வாங்​காமல் உறவினர்​கள் சென்​று​விட்​டனர்.

இதுகுறித்து சத்​யா​வின் சகோ​தரி மங்​கையர்க்​கரசி கூறும்​போது, “காவல் துறை​யினர் தவறான பாதை​யில் சென்​ற​தால்​ தான் விபத்து ஏற்​பட்டு மூவரும் இறந்​துள்​ளனர். காவலர்​கள் போதை​யில் இருந்​த​தால்​தான் விபத்து நடந்​தது. எனவே, அவர்​களை பணி நீக்​கம் செய்ய வேண்​டும். பா​திக்​கப்​பட்ட குடும்​பத்​துக்கு உரிய நிவாரண உதவி வழங்​க வேண்​டும்” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.