லக்னோ அணிக்கு வரும் மும்பை வீரர்.. இதனால் MI-க்கு லாபம்.. பரபர தகவல்!

Arjun Tendulkar – Shardul Thakkur IPL Trade News: 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைக்கும் பணிகளில் அனைத்து அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நவம்பர் 15ஆம் தேதிக்குள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். சில முக்கிய வீரர்கள் அணிகள் மாற இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஜடேஜா – சஞ்சு சாம்சன் டிரேட் செய்திகள் அனைவரையும் ஆக்கிரமித்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

MI – LSG IPL Trade: மும்பை – லக்னோ டிரேட் பேச்சுவார்த்தை 

அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெல்டுல்கரை ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு விற்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை கொடுத்து ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் இந்த டிரேட் நேரடி வீரர்கள் பரிமாற்றமாக இல்லாமல் பணம் அளித்து வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

MI – LSG IPL Trade: அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஷர்துல் தக்கூர்

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெற மெகா ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை எந்த அணியும் வாங்கவில்லை. இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மோசின் கான் உட்பட சில வீரர்கள் காயம் காரணமாக விலகி இருந்த காரணத்தினால் மாற்று வீரராக அவரை வாங்கினர். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக ஷர்துல் தாக்கூர் பயன்படுத்திக்கொண்டார். அந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்களை வீழ்த்தினார். லக்னோ அணிக்கு அவரது வருகை மிகவும் உதவியாக இருந்தது. அவரது செயல்பாடு ரசிகர்களை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியையும் ஈர்த்துள்ளது. 

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் டீல் பேசி இருக்கிறது. அர்ஜுன் டெண்டுல்கரை தருக்கிறோம், ஷர்துல் தாக்கூரை தருகிறோமென மும்பை அணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி நாளை மறுநாள் (நவம்பர் 15) அன்று  வெளியாகும். 

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2023ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் ஐபிஎல்லில் அறிமுகமானார். அவர் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள நிலையில், 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 2025 மெகா ஏலத்தில் அவரை ரூ.30 லட்சம் அடிப்படை விலக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.