சென்னை: தமிழ்நாட்டில் இந்த வாரம், வார விடுமுறை நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள் நாளை (வெள்ளி) முதல் நடைபெறும் என கூறியுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 340 பஸ்களும், நாளை மறுநாள் […]