புதுடெல்லி: டெல்லியில் கார் குண்டு வெடித்த இடத்தில், ஐ20 காரின் டயர்கள், காரின் உடைந்த பாகங்கள், 42 மாதிரிகளை தடயவியல் குழுக்கள் சேகரித்துள்ளன. பவுடர் போன்ற பொருளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும். அப்போது வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்ன என்பது தெரிந்து விடும். அவை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
பென்டாரித்ரிட்டோல் டெட்ரா நைட்ரேட் (பிஇடிஎன்) வெடிமருந்து பொருள் நைட்ரோகிளிசரின் வகையை சேர்ந்ததுதான். இதில் தயாரிக்கப்படும் குண்டு சக்தி வாய்ந்தது. இதில் உள்ள நிறமற்ற படிகங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதனால் தீவிரவாதிகள் இந்த வகை வெடிமருந்துகளை குண்டு தயாரிக்க தேர்வு செய்கின்றனர்.