மதுரை: போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற முதல்வரின் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும் என ஏற்கெனவே பல்வேறு கருத்து கணிப்புகளும் கணித்திருந்தன. தற்போது அது நடந்திருக்கிறது.
மேகேதாட்டு அணையை பற்றி விரிவான அறிக்கை குறித்து ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தேன். ஆனாலும், அது பற்றி தமிழக அரசு தனியாக ஆய்வு செய்யவில்லை. 2026-ல் போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்றவேண்டும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று அவர் கூறினார்.