வாஷிங்டன்,
அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள டோனோபா சோதனைத் தளத்தில், ஸ்டெல்த் F-35A ஜெட் விமானம் மூலம், B61-12 அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் சோதனை அமெரிக்க ராணுவம் சார்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல், அமெரிக்க எரிசக்தித் துறையின் சாண்டியா தேசிய ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அமெரிக்க ராணுவத்தின் இந்த சோதனை கடந்த ஆகஸ்ட் 19 முதல் 21-ந்தேதி வரை நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது ஆயுதம், விமானம், மற்றும் விமானிகளின் செயல்திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :