தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ரோகிணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேற்று, ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு திருமணமான பெண்ணாக, ஒரு தாயாக நான் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை அவதூறான வார்த்தைகளில் வசைபாடினர். என்னை அடிக்க செருப்பு எடுத்துக்கொண்டு பாய்ந்தனர். நான் என் சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ளவில்லை, நான் உண்மையை விட்டுக்கொடுக்கவில்லை, இதன் காரணமாகவே, இந்த அவமானத்தை நான் தாங்கிக் கொண்டேன்.

நேற்று, ஒரு மகள், கட்டாயத்தின் காரணமாக, அழுதுகொண்டிருந்த பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவர்கள் என்னை என் தாய் வீட்டிலிருந்து பிரித்துவிட்டார்கள். அவர்கள் என்னை அனாதையாக விட்டுவிட்டார்கள். உங்களில் யாரும் என் வழியில் நடக்கக்கூடாது, எந்த குடும்பத்திற்கும் ரோகிணி போன்ற மகள்-சகோதரி இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.

பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுபற்றி நீங்கள் சென்று தேஜஸ்வி யாதவ், சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸிடம் கேட்க வேண்டும். அவர்கள்தான் என்னை குடும்பத்திலிருந்து வெளியேற்றியவர்கள். கட்சி ஏன் இப்படித் தோல்வியடைந்தது என்று முழு தேசமும் கேட்கிறது. ஆனால், அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை. நான் சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸின் பெயர்களை குறிப்பிட்டதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன்” என்று அவர் கூறினார்

முன்னதாக நேற்று ரோகிணி ஆச்சார்யா தனது எக்ஸ் பதிவில், “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்துடனான உறவையும் நான் துண்டித்துக்கொள்கிறேன். சஞ்சய் யாதவும் ரமீஸும் என்னிடம் கேட்டது இதுதான். மேலும் நான் எல்லா பழிகளையும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

ரமீஸ் நேமத் கான் யார்? – ரோகிணி குறிப்பிட்ட சஞ்சய் யாதவ் ஆர்ஜேடி எம்.பியாகவும், தேஜஸ்வி யாதவுக்கு நெருக்கமானவராகவும் உள்ளார். ஆனால் ரோகிணி குறிப்பிட்ட மற்றொரு பெயர் ரமீஸ். அவர் யார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.

ரமீஸ் நேமத் கான் தேஜஸ்வி யாதவின் நீண்டகால நண்பர். தேஜஸ்வியின் கிரிக்கெட் நாட்களில் இருந்தே அவர்களின் தொடர்பு தொடர்கிறது. ரமீஸ், உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூரின் (இப்போது ஷ்ரவஸ்தி) முன்னாள் எம்.பி ரிஸ்வான் ஜாகீரின் மருமகன் ஆவார். ரமீஸ் நேமத் கானின் மனைவி ஜெபா ரிஸ்வான், துளசிபூர் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டார். ஒருமுறை காங்கிரஸ் வேட்பாளராகவும் பின்னர் சிறையில் இருந்தபோது சுயேச்சையாகவும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ரமீஸ் கான் பல குற்ற வழக்குகளை எதிர்கொள்கிறார். 2021 ஆம் ஆண்டு, துளசிபூரில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் தீபங்கர் சிங்கைத் தாக்கியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு, துளசிபூர் நகர் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ஃபிரோஸ் பப்பு கொலையில் சதி செய்த குற்றச்சாட்டில் ரமீஸ் கான், அவரது மனைவி, ஜாகீர் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

2023 ஆம் ஆண்டு குஷிநகரில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் பிரதாப்கர் ஒப்பந்ததாரர் ஷகீல் கானின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்திலும் ரமீஸின் பெயர் அடிபட்டது. 2023 ஆம் ஆண்டு, உ.பி. அரசு அவரது பெயரில் வாங்கிய சுமார் ரூ.4.75 கோடி மதிப்புள்ள நிலத்தைக் கைப்பற்றியது. ஜூலை 2024 இல் குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார், 2025 ஏப்ரலில் அவர் ஜாமீன் பெற்றார்.

பின்னர் ரமீஸ் கானும், அவரது மனைவியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதன்படி , அவர்கள் மீது சட்ட நடவடிக்கை அல்லது கைது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு உள்ளூர் நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர் அவர்கள் மீது புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

சிறுநீரக தானம்: சிறுநீரக செயலிழப்​பால் பாதிக்​கப்​பட்ட லாலு பிர​சாத்​துக்கு கடந்த 2022-ம் ஆண்​டில் ரோகிணி தனது சிறுநீரகத்தை தான​மாக வழங்​கி​னார். அப்​போது​ முதல் ஆர்​ஜேடி கட்​சி​யில் ரோகிணி​யின் செல்​வாக்கு உயர்ந்​தது. இதனால் அவர் 2024 மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்த சூழலில், 2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்​கும் சீட் ஒதுக்க அவர் வலி​யுறுத்​தி​னார். இதற்கு தேஜஸ்வி மறுப்பு தெரி​வித்​தார். இறு​தி​யில் தந்தை லாலு​வின் தலையீட்டால் தனது ஆதர​வாளர்​களை​யும் அவர் வேட்​பாளர்​களாக நிறுத்​தி​னார். நேற்று முன்​தினம் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான​போது ஆர்​ஜேடி படு​தோல்​வியை தழு​வியது. இதன்​காரண​மாக தேஜஸ்வி ஆதர​வாளர்​கள் ரோகிணி மீது விமர்​சனங்​களை முன்​வைத்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.