கேமரூன் கிரீன் வேண்டாம்.. அவருக்கு பதிலா CSK இந்த வீரரை வாங்கினா சூப்பரா இருக்கும்!

Ravichandran Ashwin On Chennai Super Kings: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக வரும் டிசம்பர் நடுப்பகுதியில் அதாவது 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் (நவம்பர் 15) தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட  வீரர்களின் பட்டியலை வெளியிட்டப்பட்டது. இதில் பல சுவாரஸ்ய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் ஆகி உள்ளார். அவருக்கு ஈடாக ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டனர். 

Add Zee News as a Preferred Source

CSK IPL Mini Auction Plan: 43.4 கோடியுடன் சிஎஸ்கே 

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மினி ஏலத்திற்கு 43..4 கோடியுடன் களமிறங்குகிறது. சென்னை அணிக்கு ஒரு வெளிநாடு ஆல்-ரவுண்டர் தேவைப்படுகிறார். அதற்கு அவர்கள் கேமரூன் கிரீனை டார்கெட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரசிகர்கள் சிலரும் கேமரூன் கிரீனை சிஎஸ்கே எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணி தங்களது அணியில் பினிஷ்ராகவும், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் கேமரூன் கிரீனை தேர்வு செய்வதை விட வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டரான ஆண்ட்ரே ரசளை தேர்வு செய்து அணிக்குள் கொண்டு வர வேண்டும் என முன்னாள் இந்திய வீரரும் சிஎஸ்கே வீரருமான ரவீச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

CSK IPL Mini Auction Plan: ஆண்ட்ரே ரஸல் சிறந்த தேர்வு – அஸ்வின் 

இது தொடர்பாக பேசிய அஸ்வின், 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வலுவான போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருக்கும். என்னை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேமரூன் கிரீனுக்கு செல்வதை விட கேகேஆர் அணி விடுவித்த அண்ட்ரே ரஸலை தேர்வு செய்யலாம். அவர் சிறந்த வீரராக இருப்பார் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் கேமரூன் கிரீனால் சிஎஸ்கே அணிக்கு ஒரு சிறந்த ஃபினிஷராக விளையாட முடியாது. ஆனால் ஆண்ட்ரே ரஸல் ஒரு சிறந்த ஃபினிஷராக இருப்பதோடு பந்து வீச்சிலும் பயனுள்ள ஒரு  வீரராக இருப்பார். 

எனவே கேமரூன் கிரீன் விலையை மினி ஏலத்தில் சிஎஸ்கே ஏற்றிவிட வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஆண்ட்ரே ரசலுக்கு முழு வீச்சில் செல்ல முடியும். மேலும், சேப்பாக்கத்தில் இருக்கும் பிட்ச் சூழலுக்கு ஆண்ட்ரே ரஸல் சிறந்த தேர்வாக இருப்பார் என ரவீச்சந்திரன் அஸ்வின் கூறினார். 

CSK IPL Mini Auction Plan: மினி ஏலத்தில் கடும் போட்டி நிலவும் 

அனைத்து அணிகளும் மினி ஏலத்தில் தங்களுக்கான ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள். அதன்படி சென்னை அணியும் ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டுதான் மினி ஏலத்திற்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் சிஎஸ்கே அணியால் நினைத்த வீரரை வாங்க முடியும். மேலும், ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரருக்கு அதிக டிமெண்ட் இருக்கும் என்பதால் மினி ஏலத்தில் கடும் போட்டிகள் நிலவும். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.