லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் மணியர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொலு ராஜ்பார் (வயது 22). இவர் அதேகிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜுன் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இதனிடையே, சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். சிறுமியிடன் குடும்பத்தினர் நடத்திய விசாரணையில் கொலு ராஜ்பார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் கொடுமை செய்த கொலு ராஜ்பாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.