கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை: சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்​தம் 90 ஆயிரம் பக்​தர்​கள் தின​மும் அனு​ம​திக்​கப்​படு​வர் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஸ்பாட் புக்​கிங்​கில் கட்​டுப்​பாடின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதனால் நெரிசல் ஏற்​பட்டு பம்​பை, மரக்​கூடம் உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் பக்​தர்​கள் வெகுநேரம் நிறுத்தி வைக்​கப்​பட்டு பின்பு அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். 6 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருக்​கும் நிலை ஏற்​படு​கிறது. அது​வரை குடிநீர், கழிப்​பிட வசதி இல்​லாத​தால் பக்​தர்​கள் பெரும் பரித​விப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். இத்​துடன் கடும் நெரிசலும் ஏற்​படு​வ​தால் பலருக்​கும் மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் கட்​டுங்​கடங்​காத கூட்​டத்​தால் அப்​பாச்​சிமேடு பகு​தி​யில் மூதாட்டி ஒரு​வர் உயி​ரிழந்​தார். போலீ​ஸார் உடலை மீட்டு விசா​ரணை நடத்​தினர். இதில் இறந்​தவர் கேரள மாநிலம் கோழிக்​கோடு அருகே கோகிலாண்டி பகு​தி​யைச் சேர்ந்த சதி (58) என்​பது தெரிய​வந்​தது. அவர் மாரடைப்​பி​னால் இறந்​த​தாக மருத்​து​வத் துறை​யினர் தெரி​வித்​தனர். கடும் நெரிசலால் குழந்​தைகளும், முதி​யோர்​களும் அதிக சிரமங்​களை சந்​தித்து வரு​கின்​றனர். இதனால் பக்​தர்​கள் பலரும் சபரிமலை செல்​லாமல் பம்பா கணபதி கோயிலுடன் திரும்​பிச் செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உப்​பார்​பட்​டியைச் சேர்ந்த பக்​தர் மணி​கண்​டன் கூறும்​போது, ‘‘ஸ்​பாட் புக்​கிங்கை உடனடி​யாக குறைக்க வேண்​டும் அல்​லது நிறுத்த வேண்​டும். அது​தான் இவ்​வளவு பிரச்​சினைக்​கும் காரணம். லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் வந்து செல்​லக்​கூடிய அளவில் இங்கு எந்த வசதி​யும் ஏற்​படுத்​தப்​பட​வில்​லை. பெரியள​வில் அசம்​பா​விதம் ஏற்​படு​வதற்கு முன்பு கூட்​டத்தை கட்​டுப்​படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றார்.
தேவசம் போர்டு தலை​வர் ஜெயகு​மார் கூறிய​தாவது: சபரிமலை​யில் பக்​தர்​கள் கூட்​டம் அதி​கரித்து வரு​கிறது. கூட்​டத்தை கட்​டுப்​படுத்த போதிய நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. ஒரு நிமிடத்​துக்கு 90 பேர் பதினெட்​டாம் படி​யில் ஏறுகின்​றனர். தின​மும் 90,000 பக்​தர்​களை மட்​டுமே அனு​ம​திக்க வேண்​டும். ஆனால் லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் குவிந்​துள்​ளனர். இதுதொடர்​பாக மாநில காவல் துறைக்கு கடிதம் எழுதி உள்​ளேன். மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் விரை​வில் சபரிமலை வந்து சேரு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கிறோம். கூட்ட நெரிசலை சமாளிக்க சுவாமியை தரிசிக்​கும் நேரம் அதி​கரிக்​கப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு ஜெயகு​மார் தெரி​வித்​தார்.

கேரள காவல் துறை ஏடிஜிபி ஸ்ரீஜித் கூறிய​தாவது: செவ்​வாய்க்​கிழமை மதி​யம் 12 மணி நில​வரப்​படி 1.96 லட்​சம் பேர் சுவாமியை தரிசனம் செய்​துள்​ளனர். கடந்த சீசனை​விட தற்​போது சபரிமலை​யில் மக்​கள் கூட்​டம் அலைமோதுகிறது. பக்​தர்​கள் கூட்​டத்தை கட்​டுப்​படுத்த உடனடி தினசரி தரிசன பதிவு 20,000 ஆக குறைக்​கப்​பட்டு உள்​ளது. கூடு​தல் போலீ​ஸார் குவிக்​கப்​பட்டு உள்​ளனர். மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் செவ்​வாய்க்​கிழமை இரவு வந்து சேரு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அவர்​களும் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​வார்​கள். பக்​தர்​கள் வி​தி​முறை​களை கடைப்​பிடித்​தால் நெரிசலை கட்​டுப்​படுத்த முடி​யும். இவ்​வாறு ஏடிஜிபி தெரி​வித்தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.