பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் மற்​றும் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்​பி) ஆகிய மூன்று கட்​சிகளும் இணைந்து மெகா கூட்​ட​ணியின் பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பிரித்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதியில் போட்​டி​யிட்​டது. ஒரு தொகு​தி​யில் கூட வெல்ல முடிய​வில்​லை. 98 சதவீத வேட்​பாளர்​கள் வைப்​புத் தொகையை இழந்​துள்​ளனர்.

அக்​கட்​சி​ 3.4 % வாக்குகளை பெற்றது. ஒரு தொகு​தி​யில் இரண்​டாவ​து, 129 -ல் மூன்​றாவ​து,73 -ல் நான்​காவது இடமும் கிடைத்​துள்​ளது. இவற்​றில் 33 தொகு​தி​களில் வெற்றி வித்​தி​யாசம் மிகக் குறைவாக இருந்​துள்​ளன. இந்த வித்​தி​யாசத்தை விட அதி​க​ வாக்​கு​களை ஜன் சுராஜ் வேட்​பாளர்​கள் பெற்​றனர். இது மெகா கூட்​ட​ணிக்​கான வெற்​றி​யில் மிகப்​பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யது.

இது​போல், பிஎஸ்பி பிஹாரின்​ 181 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு ஒரு தொகு​தி​யில்​வென்றது. ஒரு தொகு​தி​யில் 2-ம் இடம் பிடித்​தது. 20 தொகு​தி​களில் பிஎஸ்​பிக்கு கிடைத்த வாக்​கு​கள், வெற்​றிக்​கான வித்​தி​யாசத்தை விட அதி​க​மாக இருந்​தது. இந்த 20 -ல் என்​டிஏ 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. எனவே, பிஎஸ்​பி​யின் 90% வாக்​கு​கள் என்​டிஏ​விற்கே வெற்​றியை தேடித் தந்​துள்​ளன.

பிஹாரில் சுமார் 20% முஸ்​லிம்​களின் வாக்​கு​களில் ஒரு பெரும் பகு​தியை ஏஐஎம்​ஐஎம் தட்​டிச் சென்று விட்​டது. இக்​கட்​சிக்கு 9 தொகு​தி​களில் அதன் வெற்றி வித்​தி​யாசத்தை விட அதி​க​மான வாக்​கு​கள் கிடைத்தன. இதனால், அந்த தொகு​தி​களின் பாதிக்​கும் மேற்​பட்ட தொகு​தி​கள் என்டிஏ​விற்கு கிடைத்​தன. மெகா கூட்​ட​ணிக்கு சுமார் 30% வாக்​கு​கள் இழப்​பாகின. கடந்த 2020 தேர்​தலில் பெற்ற அதே 5 தொகு​தி​களை ஏஐஎம்​ஐஎம் பெற்​றுள்​ளது.

ஒவைசி​யின் போட்​டி​யால், என்டிஏ​வின் வாக்​கு​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளன. அதே நேரத்​தில் எதிர்க்​கட்​சி​யான மெகா கூட்​ட​ணி​யின் வாக்​கு​கள் மூன்று பக்​கங்​களி​லும் சிதறிடிக்​கப்​பட்​டுள்​ளன. பிஹாரின் தலித் சமூக வாக்​கு​களை பிஎஸ்​பி​யும், ஏஐஎம்​ஐஎம் முஸ்​லிம் வாக்​கு​களை​யும் மெகா கூட்​ட​ணி​யிட​மிருந்து பறித்​துள்​ளன.

ஜன் சுராஜ் தலை​வர் பிரசாந்த், பிஹாரின் இளம் வாக்​காளர்​களை மெகா கூட்​ட​ணிக்கு செல்​லாமல் தடுத்​துள்​ளார். இந்​தநிலை​யால், என்​டிஏ​விற்கு சாதக
​மான தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யால் நுழைய முடிய​வில்​லை. எனவே, இந்​த​முறை பிஹார் தேர்​தலில் முதல்​வர் நிதிஷ்கு​மார் தலை​மை​யில் ஆளும் என்​டிஏ​வின் பெண்​களுக்​கான அறி​விப்​பு​களு​டன் மூன்று கட்​சிகளால் பிரிந்​த வாக்​கு​களும்​ மெகா கூட்​ட​ணி​யின்​ மெகா தோல்​வி​யாக மாறிவிட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.