பெய்ரூட்,
இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் களமிறங்கினர். இதனால் லெபனான் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்தது. பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டால் கடந்த ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே 2022-ல் காசாவுடனான போர் தொடங்கியதில் இருந்தே தனது வடக்கு எல்லையை இஸ்ரேல் பலப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக லெபனானின் யாரோன் பகுதியில் இஸ்ரேல் சுவர் எழுப்பியது. இந்த சுவர் தங்களது எல்லையை தாண்டி வருவதாக லெபனான் அதிபர் ஜோசப் அவுன் குற்றம்சாட்டி உள்ளார். எனவே அந்த சுவரை அகற்றுமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு ஐக்கிய நாடுகளின் எல்லை காக்கும் படை வலியுறுத்தி உள்ளது.