டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 11ம் தேதி நடந்த முதல் டெஸ்ட்டில் அயர்லாந்தை இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற வங்காளதேசம் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய அயர்லாந்து முயலும். இதனால் நாளை தொடங்கும் டெஸ்ட்டில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.