CSK Ruturaj Gaikwad To Replace Shubman Gill In Indian Team: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விளையாடுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது. இதனால், அவரின் இடத்தை பூர்த்தி செய்ய ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Zee News as a Preferred Source
India vs South Africa 2nd Test: முதல் டெஸ்டில் சுப்மன் கில் காயம்
இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. அப்போது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த சுப்மன் கில்லுக்கு கழுத்தில் திடீர் வலி ஏற்பட்டது. இதனால் அவர் “ரிட்டையர்ட் ஹர்ட்” ஆகி வெளிநடப்பு ஆனார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கில், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இதுவரை அவர் மைதானத்துக்கு திரும்பாததால், அடுத்த டெஸ்டில் பங்கேற்பார் என்கிற விஷயம் குழப்பமாக உள்ளது.
India vs South Africa 2nd Test: ஓய்வு அளிக்கலாம் என பிசிசிஐ தகவல்
தொடர்ச்சியான போட்டிகளில் ஆடி வருவதால், சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கலாம் என பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. கவுகாத்தியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்டில் அவரது இடத்தை யார் பிடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
India vs South Africa 2nd Test: இந்திய அணிக்குள் வரும் ருதுராஜ் கெய்க்வாட்?
பிசிசிஐ பார்வையில் தற்போதைய முன்னிலை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் இழந்திருந்த அவர், சமீபத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார். புச்சி பாபு, துலீப் டிராபி, ரஞ்சி டிராபி, இந்தியா ‘ஏ’ அணிகளுக்காக சதம், அரைசதம் அடித்து திறமையை நிரூபித்துள்ளார். தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் கெய்க்வாட் சிறந்த ஆட்டம் காட்டி இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். ரஞ்சி டிராபியில் நம்பர் 4ல் விளையாடும் அனுபவம் கொண்ட இவர், சுப்மன் கில் விலகும் பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப மிகுந்த வாய்ப்புள்ளவர் என கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஆகாஷ் தீப்.
About the Author
R Balaji