IND VS SA டெஸ்ட் போட்டியில் மோசமான சாதனை.. இந்தியாவில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை!

Worst Record In 92 Years Of Indian Test Cricket History: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு மோசமான சாதனை அரங்கேறி உள்ளது. அதாவது போட்டியில் நடந்த நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களை தாண்டாடது இதுவே முதல்முறை ஆகும். 

Add Zee News as a Preferred Source

IND vs SA Test Match: இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ்

இப்போட்டியில் முதலில் தென்னாப்பிரிக்கா அணியே பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 31 ரன்களை எடுத்திருந்தார். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களையும் முகமது சிராஜ் மறும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்இல் 189 ரன்களை எடுத்து 30 ரன்கள் முன்னிலை வகித்தது. இதில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 39 எடுத்திருந்தார். பந்து வீச்சில் மார்க்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார். 

IND vs SA Test Match: இரு அணிகளின் இரண்டாவது இன்னிங்ஸ்

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்கள் எடுத்து 124 ரன்களை இந்திய அணிக்கு டார்கெட்டாக செட் செய்தது. விக்கெட்கள் மளமளவென சரிந்த நிலையில், கேப்டன் டெம்பா பவுமா பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 55 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் சேர்ந்து கார்பின் போஷ் ரன்கள் குவித்தார். அவர் 25 ரன்கள் எடுத்திருந்தார். இவரது ரன்கள் தென்னாப்பிரிக்கா அணி 100 ரன்களை தாண்டி இலக்கை நிர்ணயிக்க உதவின. 

இதனைத் தொடர்ந்து இந்திய அணி 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில்,இன்னிங்ஸின் தொடக்கத்தின் முதலே விக்கெட்களை இழக்க ஆரம்பித்தது. அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். அவர்கள் 26 மற்றும் 31 ரன்களை முறையே எடுத்திருந்தனர். இருப்பினும் இந்திய அணி 93 ரன்களுக்கு சுருண்டது. 

IND vs SA Test Match: 92 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை 

நான்கு இன்னிங்ஸ்களிலும் இரு அணிகளும் ஆல்-அவுட் ஆகி, ஒருமுறை கூட 200 ரன்களை எட்டவில்லை. 1933ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய மண்ணில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. நான்கு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களை எட்டாதது இதுவே முதல் முறை ஆகும்.  மேலும், இந்திய அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.