KKR செல்லும் மதீஷா பதிரானா? CSK செய்த மிகப்பெரிய தவறு., என்ன ஆச்சு?

KKR Secret Talks With CSK For Madheesh Patirana: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் பல முக்கிய வீரர்கள் வெளியிடப்பட்டனர். இது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. மேலும், இது சிஎஸ்கே அணி எடுத்த ஒரு ரிஸ்க்கான முடிவாக பார்க்கப்பட்டது. 

Add Zee News as a Preferred Source

CSK vs KKR: பதிரானாவை வாங்க திட்டமிடும் கேகேஆர் 

இந்த நிலையில், மதீஷா பதிரானாவை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மெகா ஏலத்திற்கு முன்பு ரூ. 13 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ஒரு முக்கிய வீரரை சிஎஸ்கே அணி விடுத்தி இருக்கிறது. இது ஏன்? இப்படியான ரிஸ்க் ஏன் என இது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. ஒருபக்கம் இது விமர்சனங்களை எற்படுத்தி இருந்தாலும், மறுபக்கம் இது சிஎஸ்கே அணியில் உக்தி என கூறப்படுகிறது. அதாவது, மினி ஏலத்திற்கு செல்ல அதிக பணம் வேண்டும் என்பதாலும், பதிரானாவை ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதே சிஎஸ்கே அணியின் திட்டமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

CSK vs KKR: சிஎஸ்கேவின் நட்சத்திரம் மதீஷா பதிரானா 

இலங்கை நாட்டை சேர்ந்த மதீஷா பதிரானா, கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் வந்தார். அவர் காயம் அடைந்த ஆடம் மில்னேவுக்கு பதிலாக கொண்டுவரப்பட்டார். அதன்பின் அவரது அபார பந்து வீச்சு சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை அளித்தது. இதன் காரணமாக பதிரானா தவிர்க்க முடியாத வீரராக மாறினார். இதுவரை 32 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இப்படி சிஎஸ்கே அணியின் ஓர் அங்கமாக மாறிய பதிரானாவை  பரிமாற்றம் செய்ய வந்த எந்தவொரு வாய்ப்பையும் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கவில்லை. 

CSK vs KKR: சிஎஸ்கே-வின் திட்டம் பழிக்குமா? 

இந்த சூழலில், பதிரானாவை கேட்டு கொல்கத்தா அணி பேச்சுவார்த்தையில் நடத்தி வருவது சிஎஸ்கேவின் கணக்கை தப்பாக்க வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. கொல்கத்தா அணி மினி ஏலத்தில் ரூ. 64.30 கோடியுடன் களமிறங்குகிறது. பெரிய தொகையுடன் வரும் கேகேஆர் அணி பதிரானாவை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என கடும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை வாங்க ஜடேஜா மற்றும் சாம் கரனை விட்டுக்கொடுத்ததால், மினி ஏலத்தில் சென்னை அணி ஆல்-ரவுண்டரையே வாங்க திட்டமிட்டு வரும். இதனால் பதிரானாவின் விலை எகிறும் பட்சத்தில் அவரை சிஎஸ்கே அணி எடுக்குமா? என்பது சந்தேகமே. இதற்கான விடை அடுத்த மாதம் மினி ஏலத்தின் போது தெரிந்துவிடும். என்ன நடக்க இருக்கிறது என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.   

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.