
சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கு குரல் நன்றாக வரும் என்று கழுதைப் பால் கொடுக்கக் கூடாது என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா நவ.15-ம் தேதி முதல் நவ.21-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.