Indian Coach Gautam Gambhir Latest News: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. இதில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த வெற்றி வரலாற்றை மாற்றி எழுத உதவியது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அமைக்கப்படிருந்த பிட்ச்சே காரணம் என பயிற்சியாளர் கெளதம் கம்பீர், ரிஷப் பண்ட் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
Add Zee News as a Preferred Source
பாடம் கற்காத இந்தியா
முன்னதாக கடந்த ஆண்டு நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்ததற்கும் சுழலுக்கு சாதகமான பீட்சே காரணமாக அமைந்தது. இருப்பினும் அதில் இருந்து பாடம் கற்காத இந்திய அணி மீண்டும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் தோல்வியை தழுவி உள்ளது. பயிற்சியாளர் கெளதம் கம்பீரும் தாங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பீட்சயே தயார் செய்ய கூறினோம் என தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கெளதம் கம்பீரின் பயிற்சியில் இந்திய அணி இதுவரை பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனால் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என விமர்சித்து வருகின்றனர்.
கம்பீர் வழிகாட்டுதலில் தொடர் தோல்விகள்
2021க்கு முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் பெரிதாக தோல்விகளை சந்தித்ததில்லை. ஆனால் கெளதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததற்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு நியூசிலாந்து அணியிடம் தோல்வி, அதன் பின் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி, பின்னர் இங்கிலாந்து அணியிடம் தடுமாறு தொடரை சமன் செய்தது, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மட்டுமே இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதுவே கெளதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தபின் நடந்தவை.
செளரவ் கங்குலி கருத்து
இந்த நிலையில், கெளதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை என செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பெங்கால் வாரியத்தின் தலைவராக நான் இருந்தாலும், தென்னாப்பிரிக்கா போட்டியின் பிட்ச் விவகாரத்தில் நான் ஈடுபடவில்லை. பிசிசிஐ கியூரேட்டர்கள் 4 நாட்களுக்கு முன்பாகவே கொல்கத்தாவிற்கு வந்து பிட்ச்சை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டனர். எங்கள் குயூரேட்டர் சுஜன் முகர்ஜி இந்தியா கேட்ட மாற்றங்களையே செய்தார்.
பதவியெல்லாம் விலக வேண்டாம்
பிட்ச் சிறந்ததாக இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இனி இந்திய அணி கெல்கத்தாவில் விளையாடியதை விட சிறந்த பிட்ச்களில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கெளதம் கம்பீர் பதவி நீக்கம் செய்வது குறித்து எந்த கேள்வியும் இல்லை. ஏனென்றால், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். அதேபோல் விரைவில் இந்திய மண்ணிலும் நன்றாக விளையாடுவார்கள் என்று நான் நன்புகிறேன். இவ்வாறு செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
About the Author
R Balaji