கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ – Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கேடிஎம் நிறவனத்தின் Pierer Mobility AG குழுமத்தை முழுமையாக கையகப்படுத்தியுள்ள நிலையில், கேடிஎம், ஹஸ்குவர்னா போன்ற பிராண்டுகள் முழுமையாக பஜாஜின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

ஏற்கனவே, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் Pierer பஜாஜ் ஏஜி (PBAG) நிறுவனத்தில் 49.9 சதவீத பங்குகளை வைத்திருந்தது. முன்பாக, பெரும்பான்மையான பங்குகளை Pierer இண்டஸ்ட்ரீ ஏஜி வைத்திருந்தது. Pierer மொபிலிட்டி ஏஜி (PMAG) நிறுவனத்தில் பிபிஏஜி நிறுவனம் கிட்டத்தட்ட 75 சதவீத பங்குகளை வைத்திருந்தது, அதாவது கேடிஎம் நிறுவனத்தில் பஜாஜ் நிறுவனம் மறைமுகமாக சுமார் 37.5 சதவீத பங்குகளை வைத்திருந்தது.

Pierer பஜாஜ் ஏஜி விரைவில் பஜாஜ் ஆட்டோ இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் ஏஜி என்ற பெயரைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் Pierer மொபிலிட்டி ஏஜி வழக்கமான ஒப்புதல்களுக்கு உட்பட்டு பஜாஜ் மொபிலிட்டி ஏஜி என மறுபெயரிடப்பட உள்ளது.

30க்கு மேற்பட்ட ஆண்டுகளாக KTM நிறுவனத்தை வழிநடத்தி வந்த ஆஸ்திரியாவின் Pierer Groupன் அத்தியாயம் இதனால் முடிவுக்கு வருகின்றது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2007 ஆம் ஆண்டு KTMல் தனது முதல் பங்குகளை வாங்கியது, மேலும் இரு நிறுவனங்களும் நெருக்கமாக இணைந்ததால் பல ஆண்டுகளாக கூட்டாண்மையை வலுப்படுத்தியது.

சிறிய முதலீட்டில் துவங்கிய பஜாஜ்-கேடிஎம் கூட்டணி, இந்தியாவில் உற்பத்தி துவங்கி கேடிஎம் பைக்குகளை தயாரிக்க துவங்கிய பஜாஜ் படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.