The Ashes, AUS vs ENG: கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த 2025-26 ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் நாளை (நவ. 20) தொடங்குகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிக்கு இடையே கடந்த 143 ஆண்டுகளாக ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஷஸ் தொடர் நடத்தப்படுகிறது. இத்தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம் வரை இத்தொடர் நீளும்.
Add Zee News as a Preferred Source
The Ashes, AUS vs ENG: ஆஸ்திரேலியா வசம் உள்ள ஆஷஸ்
ஒருமுறை இங்கிலாந்திலும் அடுத்த முறை ஆஸ்திரேலியாவிலும் ஆஷஸ் தொடர் நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக 2021ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்தபோது, ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது. அடுத்து, 2023ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் நடந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை பெற்றது. இதனால், தற்போது ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியாவின் வசம் உள்ளது.
The Ashes, AUS vs ENG: இங்கிலாந்தின் 15 ஆண்டுகள் காத்திருப்பு
இங்கிலாந்து அணி கடைசியாக 2015ஆம் ஆண்டில் ஆஷஸ் கோப்பையை வென்றது. அதற்கு பின் ஆஷஸ் கோப்பையை அந்த அணியால் கைப்பற்றவே முடியவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி கடைசியாக 2010-11 ஆண்டில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தலைமையில் ஆஷஸ் தொடரை வென்றது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தற்போது இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Ashes, AUS vs ENG: பலவீனமாக இருக்கும் ஆஸ்திரேலியா
அதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக வயதான வீரர்களால் நிரம்பியிருக்கிறது. அதாவது, ஆஸ்திரேலியா ஸ்குவாடில் அனைவருமே 30 வயதுக்கும் மேலானவர்கள். கேம்ரூன் கிரீனுக்கு மட்டுமே வயது 26 ஆகிறது. இது மட்டுமின்றி, டெஸ்ட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் போட்டியை தவறவிட்டுள்ளார். எனவே, ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதுமட்டுமின்றி, அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட்டும் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியிருக்கிறார். மேலும், உஸ்மான் கவாஜா உடன் ஓபனிங்கில் சர்வதேச டெஸ்ட் அனுபவமே இல்லாத ஜேக் வெதரால்ட் களமிறங்குகிறார். அறிமுக வீரர்களால் நிறைந்துள்ள ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணியால் எளிதில் வீழ்த்த வாய்ப்பிருக்கிறது.
The Ashes, AUS vs ENG: ஆஸ்திரேலிய பந்துவீச்சு படை எப்படி இருக்கும்?
ஹசில்வுட்டுக்கு பதில் 31 வயது வீரரான பிரெண்டன் டாகெட் என்ற வீரரை ஆஸ்திரேலியா முதல் போட்டியின் ஸ்குவாடில் சேர்த்துள்ளது. இவர் முதல் போட்டியில் அறிமுகப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிமுகப்படுத்தப்பட்டால், பிரெண்டன் டாகெட் ஆஸ்திரேலிய அணியின் மூன்றாவது பூர்வக்குடி வீரர் ஆவார். ஜேசன் கில்லெஸ்பி, ஸ்காட் போலாண்ட் ஆகியோர் முதலிரு வீரர்கள் ஆவர். தெற்கு ஆஸ்திரேலிய வீரரான இவர் மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் வீசும் திறன் கொண்டவர். இருப்பினும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் போலாண்ட் ஆகியோர் புதிய பந்தில் பந்துவீசுவார்கள் எனலாம். முதல் போட்டி பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான நாதன் லியான் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்.
The Ashes, AUS vs ENG: அனுபவம் கொண்ட பேட்டிங் ஆர்டர்
உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், ஜாஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷேன், அலக்ஸ் கேரி உள்ளிட்ட அனுபவ வீரர்கள் பேட்டிங்கில் நிரம்பியிருக்கிறார்கள். விக்கெட் கீப்பராக கேரிக்கு முதன்மையாக வாய்ப்பு கிடைக்கும், ஜாஷ் இங்கிலிஸ் வெளியே அமர்வார். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் கேம்ரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், மைக்கேல் நேசர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கிரீன் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். இங்கிலாந்து அணி அதன் 12 வீரர்கள் கொண்ட பிளேயிங் அணியை அறிவித்துவிட்டது. அதில் நாளை ஒரு வீரர் மட்டும் பிளேயிங் லெவனுக்காக விடுவிக்கப்படுவார்.
The Ashes, AUS vs ENG: ஆஷஸ் தொடரை எங்கு, எப்போது பார்ப்பது?
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நாளை (நவ. 21) தொடங்குகிறது. போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும். இதை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. ஆஷஸ் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் நீங்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
The Ashes, AUS vs ENG: பிளேயிங் லெவன்
ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பிரெண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட், நாதன் லியான்.
இங்கிலாந்து (12 வீரர்கள் அறிவிப்பு): பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், மார்க் வுட்.
மேலும் படிக்க | IND vs SA 2nd Test: இந்தியாவிற்கு வாழ்வா-சாவா போட்டி..! அணியில் 2 அதிரடி மாற்றம்!
மேலும் படிக்க | இந்தியா – தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி.. முக்கிய வீரர் விலகல்!
மேலும் படிக்க | மேக்ஸ்வெல்லை டார்கெட் செய்யும் 3 அணிகள்! யாருக்கு பொருத்தமாக இருப்பார்?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More